பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய் பற்றி போட்டியாளர் சொன்ன வார்த்தை.. ஜேசன் சஞ்சய் கொடுத்த பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜேசன் சஞ்சய் இப்போது எங்கு சென்றாலும் 'விஜய்யின் மகன்' என்ற அடையாளமும் அவருடன் சேர்ந்து செல்கிறது. ஆனால் இயக்குநராக தனது முதல் படமான 'சிக்மா'வை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் ஜேசன் சஞ்சய் தீவிரமாக இருக்கிறார். அந்த வகையில், படத்தின் புரமோஷனுக்காக தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே சென்றிருக்கிறார்.

'சிக்மா' திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் நாயகன் சந்தீப் கிஷனுடன் ஜேசன் சஞ்சயும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நாகார்ஜுனா இருவரையும் வரவேற்றிருக்கிறார். ஆனால், ஜேசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வந்தைவிட, அங்கு அவரைப் பார்த்து சொல்லப்பட்ட ஒரு விஷயம்தான் இப்போது அதிகமாக பேசப்படுகிறது.

அப்பாவை போலவே மகன்

ஜேசனை வரவேற்ற நாகார்ஜுனா, விஜய்யை பற்றியும் பேசியிருக்கிறார். குறிப்பாக ஜேசனை முதலில் பார்த்தபோது 1993-94-95 காலகட்டத்தில் விஜய் எப்படி இருந்தாரோ, அதேபோல ஜேசன் இருப்பதாக நாகார்ஜுனா பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். அதுமட்டுமல்லாமல், "இப்படி இருக்கும்போது ஏன் நடிக்கவில்லை? இயக்குநராகப் போயிருக்கிறீர்களே?" என்று ஜேசனிடமே கேட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

இதை கேட்டதும் ஜேசன் சஞ்சயும் தனது பக்கத்தில் இருக்கும் விஷயத்தை தெளிவாக சொல்லியிருக்கிறார். சின்ன வயசிலிருந்தே தனக்கு நடிப்பைவிட எழுத்து மற்றும் இயக்கத்தில்தான் அதிக ஆர்வம் இருந்ததாகவும், அதனால்தான் இயக்குநராக தனது பயணத்தை தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Bigg Boss Vijay

நாகார்ஜுனா சொன்ன வார்த்தை

அதனால் நாகார்ஜுனா சொன்ன அந்த ஒரு வார்த்தை இப்போது ஜேசன் ரசிகர்களை குஷிப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக 90களில் விஜய்யின் தோற்றத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஜேசனை பார்க்கும்போது அந்த காலத்து விஜய் நினைவுக்கு வருகிறதா? என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் எழுந்திருக்கிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களுடன் ஜேசன்

நாகார்ஜுனாவுடன் மேடையில் இருந்த ஜேசன், பிக் பாஸ் போட்டியாளர்களுடனும் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நடிகர் திரிகுன் நடித்த படங்களை பார்த்திருப்பதாகவும் அவருடைய நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் ஜேசன் தெரிவித்துள்ளார். இதை கேட்ட திரிகுனும் மகிழ்ச்சி அடைந்து ஜேசனுக்கு நன்றி சொல்லியதோடு, 'சிக்மா' படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அப்போது நாகார்ஜுனா இவரை உங்களுக்கு தெரியுமா? என்று ஜேசனை பற்றி கேட்க, உடனே அந்த நடிகர் எனக்கு தெரியுமே இவர் தளபதி விஜய்யின் மகன் என்று சொன்னார். அதற்கு ஜேசன் வெக்கப்பட்டு கொண்டே சிரித்துக் கொண்டிருந்தார்.

அதனால் வழக்கமான ஒரு திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சியாக இல்லாமல், பிக் பாஸ் மேடையில் ஜேசனுக்கும் போட்டியாளர்களுக்கும் இடையே நடந்த இந்த உரையாடலும் கவனம் பெற்றிருக்கிறது. ஜேசன் சஞ்சயை பொறுத்தவரை, அவர் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' படம்தான் இப்போது மிகப்பெரிய கவனம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+