நடிகர் ராஜ்கிரண் பற்றி அவருடைய வளர்ப்பு மகள் வெளியிட்ட குற்றசாட்டுகள்.. கண்ணீர் மல்க வேண்டுகோள்!
சென்னை: சமீபத்தில் சின்னத்திரை நடிகர் ஆன முனீஸ் ராஜாவை திருமணம் செய்த நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் தற்போது வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் ராஜ்கிரண் தன்னுடைய வளர்ப்பு மகள் திருமணத்திற்கு பிறகு தனக்கும் அவருக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அவரின் மீது பல குற்றச்சாட்டுகளை அவருடைய வளர்ப்பு மகள் கூறி இருக்கிறார்.

திருமணமும் விளக்கமும்
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலின் மூலம் நடித்த நடிகர் முனீஸ் ராஜா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்து வருகிறார். இவர், திரைப்பட நடிகரான ராஜ்கிரண் வளர்ப்பு மகள் ஆன பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நடிகர் ராஜ்கிரண் இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு எனக்கும் இவர்களுக்கும் எந்த ஒரு சம்மதமும் இல்லை. என்னுடைய பெயரை பயன்படுத்தி இவர்கள் யாரிடமும் எந்த ஒரு பயனும் பெறக் கூடாது. அது போல தன்னுடைய பெயரை கெடுக்கும் விதமாகவும் இவர்கள் நடந்து கொள்ளக் கூடாது என்று ஒரு பெரிய விளக்கத்தையும், அறிக்கையையும் வெளியிட்டு இருந்தார்.

முனீஸ் ராஜா வெளியிட்ட வீடியோ
அதற்குப் பிறகு நடிகர் ராஜ்கிரணின் கருத்து எல்லாமே பொய் என்று சொல்லும் விதமாகத்தான் நடிகர் முனீஸ் ராஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு, தன்னுடைய மனைவியைக்காக தான் புதியதாக தொழில் தொடங்கி கொடுத்திருப்பதாகவும், புது வீடு கட்டிக்கொண்டு வருவதாகவும் அதற்கான கிரகப்பிரவேசம் விரைவில் இருக்கும் என்றும் அதில் ரசிகர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவை பார்த்த பலர் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வந்த நிலையில், பலர் இது ராஜ்கிரணை வம்பிழுக்கும் வகையில் அவரை சீண்டிப் பார்க்கும் விதமாகவும் அவர் சொன்னது எல்லாம் பொய் என்று சொல்லும் விதமாக இவர் நடந்து கொள்வதாக காட்டி வருகிறார் என்று இரண்டு விதமாக கருத்துக்கள் வெளியாகி வந்தது.

இதுதான் பிரச்சனை
இந்த நிலையில் இன்று பிரியா ஒரு வீடியோவே வெளியிட்டு இருக்கிறார். அதில், நான் பிரியா முனீஸ் ராஜா என்னோட கல்யாணம் உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும். எல்லாம் மீடியாவிலும் வந்தது. இப்போ என்னோட பெத்த தாய் பத்ம ஜோதி என்ற கதீஜா ராஜ்கிரண். இவர் ராஜ்கிரண் சார் தூண்டுதலின் பெயரில் என்னை பெத்த தாய் கதீஜா ராஜ்கிரண் என் மீது பொய் கம்பளைண்ட் கொடுத்திருக்கிறார். அதாவது என்னுடைய கல்யாணம் முடிந்த பிறகு youtube-ல் ஆள் வைத்து நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை போடுவது, அப்புறம் போனில் என்னை மெண்டல் டார்ச்சர் பண்ணுவது அப்புறம் தெரிஞ்சவங்க ரொம்ப பெரியவங்க கிட்ட எல்லாம் என்னை பத்தி தப்பா சொல்றது .இந்த மாதிரி தொடர்ந்து பண்ணிக்கிட்டே இருந்தாங்க. இந்த மாதிரி பண்ணாதீங்க என்று நான் சொல்லி இருந்தேன் .அதுபோல என்னுடைய ஜுவல்ஸ் அந்த வீட்டில் இருந்தது. என்னுடைய ஜுவல்ஸ் என்றால், என்னுடைய அப்பா எனக்கு கொடுத்தது. என்னுடைய ரிலேஷன் எனக்கு கொடுத்தது .அது அங்கே இருந்தது. அதை நான் திரும்ப கேட்டுருந்தேன்.

கண்ணீர் மல்க வேண்டுகோள்
அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு என்னுடைய அப்பாவை பார்த்து எனக்கு சப்போர்ட் பண்ணுங்க அப்பா என்று நான் கேட்டிருந்தேன். அவங்க சரி என்று சொன்னதற்காக அவர் மீதும், ஃபாரினில் இருக்கும் என்னுடைய தம்பியின் மீதும், இதற்கு எதுவும் சம்பந்தமில்லாத என்னுடைய ஹஸ்பண்ட் மீது கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க. நான் காவல் நிலையத்திற்கு போகிறேன். சம்மனுக்கு ஆஜராக போறேன். சம்மனுக்கு ஆஜர் ஆகிட்டு பிரஸ் மீட்டிங் வைப்பதற்கு தயாராக இருக்கிறேன். இந்த விஷயம் எல்லாம் உங்க எல்லாருக்கும் தெரியணும். உங்கள் எல்லாருடைய ஆதரவும் எனக்கு வேணும். எனக்கு நியாயம் கிடைக்கணும் .உங்க எல்லாருடைய சப்போர்ட்டும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று இவர் படபடப்பாக பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைக் குறித்து ராஜ்கிரண் தரப்பில் இருந்து எந்த பதிலும் கூறப்படாத நிலையில் இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் பலர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications