இணையத்தில் லீக்கான ஜி.பி முத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் வீடியோ.. இப்படியா பண்ணுவாங்க!?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஜி பி முத்து விலகி விட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஒரு சில நாட்களாக ஜி பி முத்து தன்னுடைய குடும்பத்தை பிரிந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்க முடியவில்லை வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நேற்று கமல் வந்து பேசினாலும் தன்னுடைய முடிவில் மாற்றம் இல்லை நான் வீட்டுக்கு சென்ற விட வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் இன்று இவர் குறித்து வெளியான வீடியோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

கடந்த சீசன் மைனஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடிவிட்டது .கடந்த இரண்டு சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் ரசிகர்களுக்கு தெரிந்த முகங்கள் இல்லாமல் இருந்தது ,அது போல போட்டியாளர்கள் பலர் அதிகமாக இங்கிலீஷில் பேசிக்கொண்டு இருப்பதும் இந்த நிகழ்ச்சிக்கு மைனஸ் ஆக இருந்தது. ஆனால் இந்த சீசனில் சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களை கொண்டிருந்த ஜிபி முத்து கலந்து கொள்கிறார் என்று சொன்னதும் அவருடைய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை குறித்து எதிர்பார்ப்பு தோன்றி விட்டது.

ஆதாமும் பாதாமும்
ஜி பி முத்துக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை பலர் பார்ப்பதாக கூறி வந்தனர். ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுக்கும் விதமாக முதல் நாளில் ஜிபி முத்து மற்றும் கமலுக்கு இடையே நடந்த ஆதாம், ஏவால் கதை சுவாரசியத்தை கூட்டி இருந்தது .முதல் நாளில்ஆதாம் என்றால் யார் என்று ஜிபி முத்து கேட்டதை குறித்து சமூக வலைத்தளத்தில் அதிகமாக மீம்ஸ்கள் வலம் வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த வாரம் சனிக்கிழமை எபிசொட்டில் கமல் மீண்டும் அவரிடம் ஆதம் குறித்து கேட்டதற்கு, அவர் யார்? எங்கே இருக்கிறார்? என்று ஜிபி முத்து மீண்டும் கேட்டு அதுவும் பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் இந்த நிகழ்ச்சிக்கான வரவேற்பை ஏற்படுத்தி இருந்தது.

ஜி பி முத்துவின் திடீர் மாற்றம்
இந்த நிலையில் கடந்த வாரம் முழுக்க ஜிபி முத்து தன்னுடைய குடும்பத்தை நினைத்து பிக் பாஸ் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. எனக்கு என் குழந்தைகளை பார்க்க வேண்டும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று குழந்தை போல அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது தன்னால் மூச்சு கூட விட கூட முடியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார். இரவு முழுக்க சரியாக தூக்கம் இல்லாமல் ஜிபி முத்து இருந்து வருவதை குறித்து சக போட்டியாளர்களும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வலம் வரும் வீடியோ
இந்த நிலையில் ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டை விட்டு விலகி விட்டார் என்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதில் ஜி பி முத்து பிக்பாஸிடம் என்னால் வீட்டிற்குள் இருக்க முடியவில்லை வெளியே சென்று விடுகிறேன் என்று கூறுகிறார். அதற்கு பிக்பாஸ் இதுதான் உங்களுடைய இறுதியான முடிவா? என்று கேட்கிறார். ஆமாம் என்று சொன்னதும், ஓகே நீங்க போய் உங்க பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லிக்கிட்டு மெயின் கேட் வெளியாக வெளியே வந்து விடுங்கள் என்று சொல்கிறார். இது பார்ப்பதற்கு எடிட்டிங் வீடியோ என்று தெரிகிறது. ஆனாலும் இதுதான் உண்மை என்று பலர் பரப்பி வருகின்றனர். இதனால் ஒரு சிலர் "யாம்ல..இப்படி பண்றீங்க? செத்த பயலுகளா? என்று திட்டிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் ஜி பி முத்து உள்ளே இருக்கும் மனநிலை சரியில்லை அதனால் வெளியேறி விட்டால் நல்லது தான் என்று கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் ஜி பி முத்து உள்ளே இருந்தால் தான் நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் அவர் இல்லை என்றால் நாங்கள் பிக் பாஸ் பார்க்க மாட்டோம் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications