
ரச்சிதாவை குறித்து கணவர் தினேஷ் வெளியிட்ட திடீர் பதிவு... எல்லாத்துக்கும் காரணம் "அவர்”தானாம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜா சீரியலில் நடித்து வரும் தினேஷ் தன்னுடைய மனைவியை குறித்து வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ரச்சிதா உடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில் இன்று திடீரென ரச்சிதாவின் மாற்றத்திற்கு காரணம் இந்த நபர் தான் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்.
பஸ்ஸை வழிமறித்து கல்லூரி மாணவர்கள் ரகளை.. போலீஸிடம் மாணவிகள் போட்டுக்கொடுத்ததால் தலைதெறிக்க ஓட்டம்

கண் பட்டுவிட்டது போல
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் சீரியலில் மூலமாக சீரியலில் இறங்கிய தினேஷ் அந்த சீரியலில் அவரோடு நடித்த ரச்சிதா மகாலட்சுமியை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய ஒரு சில வருடங்களிலே புரிதலின் காரணமாக திருமணம் செய்து கொண்டதாக கூறி வந்தனர். அதற்கு பிறகும் கூட பல நேரங்களில் இவர்கள் இருவரும் ஜோடியாக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் இவர்களுடைய வாழ்க்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை சமீபத்தில் இவர்கள் ஒரு சில மாதங்களாகவே பிரிந்து தான் வாழ்ந்து வருகிறார்கள்.

பல சீசன்களின் மீனாட்சி
ரச்சிதா ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்காத காரணத்தால் மீண்டும் சீரியலுக்கே திரும்பி இருந்தார். செகண்ட் இன்னிங்ஸ் சிலருக்கு சிறப்பாக அமைந்துவிடும் .அந்த மாதிரி தான் ரச்சிதாவுக்கு சிறப்பாக அமைந்திருந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து இவர்தான் மீனாட்சி ஆக நடித்துக் கொண்டிருந்த இப்ப வரைக்கும் இவரை சின்னத்திரையின் மீனாட்சி என பல காலமாக அழைத்து வருகின்றனர். இந்த சீரியலில் இவருடைய தோழியாக மைனா நந்தினி நடித்திருப்பார். முதல் முறையாக சரவணன் மீனாட்சி மூலமாகத்தான் நந்தினிக்கு மைனா என்று செல்ல பெயர் கிடைத்தது.

திடீரென முடிக்கப்பட்ட சீரியல்
தற்போது ஒரு சில வருடங்களாகவே ரச்சிதா நடிக்கும் சீரியல்கள் திடீரென முடிக்கப்பட்டு வருகிறது. அது அவருடைய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்து வருகிறது. கடைசியாக கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான இது சொல்ல மறந்த கதை என்னும் சீரியலில் ரச்சிதா நடித்து வந்தார். இந்த சீரியலில் கதாநாயகியாக இருந்தாலும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். இதை ஆரம்பத்தில் ரசிகர்கள் பலர் அதிர்ச்சியாக கூறி வந்தனர். இப்பவே இந்த கேரக்டரில் நடிக்க வேண்டுமா? என்று பல கேள்வி எழுப்பிய நிலையில் கதையின் ஆழம் அதிகமாக இருப்பதால் அதில் நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று அவர் கூறியிருந்தார். ஆனால் திடீரென இந்த சீரியல் முடிக்கப்பட்டதும் அவரை விடவும் அவருடைய ரசிகர்கள் அதிகமாக அதிர்ச்சி அடைந்தனர். அதை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

மைனா மீது கோபம்
பல வருடங்களாக எதிர்பார்த்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வாய்ப்பு கிடைத்தது ரச்சிதா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஆனால் இவருடைய கணவர் பிரிந்து இருந்தாலும் முதல் நாளே ரச்சிதாவுக்கு வாழ்த்துக்களை கூறி பதிவிட்டு இருந்தார். அதை தொடர்ந்து தினமும் ரச்சிதாவிற்காக பதிவுகளை வெளியிட்டு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து மைனா நந்தினி செய்யும் செயல்கள் தனக்கு பிடிக்கவில்லை என்று கூறி வந்தார் காரணம் உயிர் தோழியாக இருக்கும் மைனா ராபர்ட் மாஸ்டரோடு சேர்த்து ரச்சிதாவை கலாய்த்து வருவதை குறித்து கோபப்பட்டு இருந்தார்.

உண்மையான பாராட்டுக்கள்
இன்று உங்கள் இணை போட்டியாளராக இருந்தாலும் ஒரு சில காலமாக தன்னை உங்களின் நெருங்கிய தோழி என்று கூறிக்கொண்டு சில நெறிமுறை அற்ற கேள்விகளை கேட்டார். உங்களை தூண்டி விடுவதற்காக தான் ஆனால் அதையெல்லாம் நீங்கள் விளையாடி கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய அலங்காரத்தை நீங்கள் சிறப்பாக பராமரித்து அழகாக இருந்தது. உண்மையில் நீங்கள் ஒரு ஸ்வாக்கர் தான் எந்த உணர்ச்சி தாக்குதல்களுக்கும் வெளி காட்டாமல் இருந்தது, என்று பதிவிட்டு ரச்சிதாவை பாராட்டி இருக்கிறார். நேற்றைய எபிசோட்டில் பழங்குடியினராக இருக்கும் அணியினர் எவ்வளவோ டார்ச்சர் செய்தாலும் தன்னுடைய நிலையில் இருந்து மாறாமல் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். இந்த பதிவை பலர் பாராட்டி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் இன்று தான் ரச்சிதாவுக்கு தான் வாக்கு செலுத்தி இருக்கிறேன் என்பதை பகிர்ந்து இருக்கிறார்.