பாரத் மாதாகி ஜேன்னா என்ன? இதில் எங்கே மதம் இருக்கு? நடிகர் ரஞ்சித் ஆதங்க பேட்டி
சென்னை: நடிகர் ரஞ்சித் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே ஆகிய முழக்கங்களின் அர்த்தம் குறித்து பேசிய வீடியோ இப்போ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் எங்கே மதம் இருக்கிறது? என்று அவர் கேட்டிருக்கும் விதம்தான் பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
சமீபத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற விநாயகர் ஊர்வலத்தை ஒட்டி நடந்த இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்ட போது தான் ரஞ்சித் இப்படி பேசி இருக்கிறார். இந்தியா ஆன்மீகத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட நாடு. நாட்டுக்காக பல தலைமுறைகளை சேர்ந்தவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு பற்றியும் பேசி இருந்தார்.

அதன் பிறகு வந்தே மாதரம் பற்றி அவர் பேசும்போது, வந்தே மாதரத்திற்கான அர்த்தம் என்னவென்றால், "நான் எனது அம்மாவை வணங்குகிறேன்" இதில் ஏதாவது மதம் இருக்கிறதா? மதமே இல்லாத ஒரு அர்த்தமுள்ள நாடு இந்தியா மட்டுமே. அதேபோல பாரத் மாதா கி ஜே என்ற முழக்கத்தையும், மதத்துடன் தொடர்பு படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்பதற்கு என் பாரத அன்னை வெல்லட்டும், என் நாடு ஜெயிக்கட்டும் என்பதுதான். இதில் மதம் இருக்கிறதா? என்று அவர் பேசி இருக்கிறார்.
இந்திய சுதந்திரத்திற்காக எத்தனையோ லட்சம் பேர் தியாகம் செய்திருக்கிறார்கள். இங்கு நாம் வாழ வேண்டும் என்றால் யாரோ ஒருவர் உயிரை காவு கொடுத்திருக்கிறோம் என்று கூறினார். மேலும், விநாயகர் சிலையை பொது இடங்களுக்கு கொண்டு வந்து வழிபடும் முறை பற்றி அவர் பேசும்போது, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் சமூக ரீதியாக பிரிக்கப்பட்டிருந்த மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக விநாயகர் விழாக்கள் பயன்படுத்தப்பட்டன என்று வரலாற்று பின்னணியை பற்றியும் அவர் பேசிக் கொண்டிருந்தார்.
இதை ஒரு சிலர் வந்தே மாதரம் என்ற வார்த்தைக்கு அவர் சொன்ன தேச உணர்வு சார்ந்த விளக்கம் சரிதான் என்று ஆதரவு தெரிவிக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் அந்த வார்த்தைக்கும் அதன் வரலாற்று பின்னணிக்கும் இன்னும் விரிவான மதம் மற்றும் இலக்கிய விவாதங்கள் இருப்பதாக கூறி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications
