
பிரம்மாண்டமாக வீடு கட்டிய விஜய் டிவி ராமர்.. ஆனால் அந்த கட்டவுட், சாப்பாடு யாரும் எதிர்பார்க்காதது
சென்னை: விஜய் டிவியில் காமெடி நடிகராக இருக்கும் ராமர் புதியதாக மதுரையில் சொந்தமாக ஒரு வீட்டை கட்டி இருக்கிறார். இவருடைய வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அனைவரையும் வரவேற்கும் விதமாக ராமர் யாரும் யோசிக்காத வகையில் வித்தியாசமாக யோசித்து கட்டவுட் மற்றும் சாப்பாடு போட்டு அசத்தியிருக்கிறார்.
ரச்சிதாவை பற்றி மைனா கூறிய ரகசியங்களை புறம் பேசும் ஏடிகே... இப்படியா பேசணும்? கலாய்க்கும் ரசிகர்கள்

டைமிங் காமெடி
பல வருடங்களாக தனது திறமைக்கு சரியான அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்த ராமர் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை விஜய் டிவியில் போட்டு அமர்ந்து கொண்டார். எந்த நிகழ்ச்சி என்றாலும் அங்கே ராமர் இல்லாமல் நடைபெறாது என்று சொல்லும் அளவிற்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவருடைய அட்ராசிட்டி தொடர்ந்து வருகிறது. பெண் வேடமிட்டு வந்தாலும் சரி, புது புது வேடங்களில் இவர் வந்தாலும் சரி என்ன பேசினாலும் டைமிங் கவுண்டர் கொடுத்து அனைவரையும் சிரிக்க வைத்து விடுகிறார்.

நடிகராகவும் அரசு அதிகாரியும்
பொதுவாக பலரும் சிரிப்பை தான் தேடுவார்கள். பலரையும் துக்கத்தை மறக்க வைக்கும் ஒரு செயலை தான் ராமர் செய்து வருகிறார். ஒரு அரசு அதிகாரியாக இருந்தாலும் அதையும் பார்த்துக்கொண்டு நடிப்பிலும் தனது திறமையின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டார். ராமர் பல வருட போராட்டத்திற்கு பிறகு இப்போது தான் தனது சொந்த ஊரான மதுரையில் ஒரு வீட்டை கட்டி முடித்து இருக்கிறார். இவர் ஒரு நடிகராக மட்டுமே தெரிந்த ரசிகர்கள் பலருக்கும் இவர் ஒரு விஏஓ அதிகாரி என்பது யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான புகைப்படம் மூலம் தான் இவரை பலரும் புரிந்து கொண்டனர்.

வித்தியாசமான கட்டவுட்
சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் இப்போது காமெடி நடிகராக கலை கட்டிக் கொண்டிருக்கும் ராமர் தன்னுடைய வீட்டு கிரகப்பிரவேசத்திற்கு விஜய் டிவி பிரபலங்கள் பலரையும் அழைத்து இருக்கிறார் .அதில் இவரோடு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர் .அது மட்டும் அல்லாமல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலம் அடைந்த ராஜலட்சுமி செந்தில் கணேஷ் ஜோடியாக கலந்து கொண்டிருக்கின்றனர். பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தாலும் இவருடைய வீட்டில் இவர் அனைவரையும் வரவேற்கும் விதமாக கட்டவுட் வைத்திருக்கிறார் .அதில் "அது வாங்கினால் இது இலவசம்" என்று சொல்லும் வகையில் ஒரு பேனரை வைத்திருக்கிறார். அதில் மூன்று பெண்கள் ராமரை சுற்றி வளைத்தபடி நிற்க ராமர் 23ஆம் புலிகேசி வடிவேலு கெட்டப்பில் இருக்கிறார்.

அசத்தலான சாப்பாடு விருந்து
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய வீட்டிற்கு வந்தவர்களுக்கு கறி சாப்பாடு போட்டு அசத்தியிருக்கிறார். நல்லி எலும்பு, மட்டன் குழம்பு, குடல் கூட்டு, ரசம், மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா. முட்டை பணியாரம் என விதவிதமாக அசைவ சாப்பாடால் அனைவரையும் திக்கு முக்காட வைத்திருக்கிறார். இவருடைய பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். பல வருட போராட்டத்திற்கு பிறகு சொந்தமாக வீடு கட்டி இருக்கும் இவருக்கு திரை பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.