Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாவால் மாறிப்போன வாழ்க்கை... அடுத்தடுத்த இழப்புகள்.. தனியாக தவிக்கும் கனகாவின் தற்போதைய நிலை!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 80ஸ் கிட்ஸ்களின் கதாநாயகியாக இருந்த கனகாவின் வாழ்க்கையில் பல சோகங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

பல வருடங்களாக சினிமாவை விட்டு விலகிய நடிகை கனகாவின் தற்போதைய நிலை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

உடல் அளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் எதிர்பாராத பல பிரச்சனைகளை நடிகை கனகா சந்தித்துக் கொண்டிருக்கிறார்.

ஒரே வருடத்தில் கிடைத்த வெற்றி

ஒரே வருடத்தில் கிடைத்த வெற்றி

கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடிகை கனகாவை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. அப்போ முதல் இப்ப வரைக்கும் இவருடைய கண்ணுக்கு பல ரசிகர்கள் அடிமைகளாக இருந்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் எட்டுக்கும் மேற்பட்ட ஹிட்டான திரைப்படங்களை கொடுத்த நடிகை கனகா தமிழ் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மலையாள திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். மலையாளத்தில் இவர் காட்பாதர் என்கிற திரைப்படத்தின் மூலமாக மலையாள ரசிகர்களின் மனதிலும் இடத்தை பிடித்து விட்டார்.

30 வருடங்களாக காணவில்லை

30 வருடங்களாக காணவில்லை

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து பிரபலமான நடிகை கனகா சுமார் 30 வருடங்களாகவே காணாமல் போய்விட்டார். இந்த நிலையில்தான் சமீபத்தில் இவருடைய வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அதற்கு பிறகு தான் ரசிகர்களின் மத்தியில் மீண்டும்
கனகா எங்கே போனார்? அவருக்கு என்ன ஆனது? எதற்காக வெளி உலகத்திற்கு வரவில்லை என்று பலரும் அவரைப் பற்றி கேள்வி எழுப்ப தொடங்கி இருக்கின்றனர். என்னதான் பலர் இவருடைய பழைய திரைப்படங்களை பார்த்து பழகி இருந்தாலும் இவர் சமீபத்தில் ஒரு வருடங்களுக்கு முன்பு வெளியிட்ட வீடியோ பலருக்கும் அதிர்ச்சியை தான் கொடுத்திருந்தது. இப்ப இருக்கிற ஜெனரேஷன் பலருக்கும் கனகாவை தெரியவில்லை என்றாலும் அவருடைய தீவிரமான ரசிகர்களுக்கு அவருடைய லேட்டஸ்ட் வீடியோ அதிர்ச்சியை தான் கொடுத்து இருக்கும்.

பிறப்பு ரகசியம்

பிறப்பு ரகசியம்

உடல் அளவில் அதிக அளவில் மாறிப்போன கனகாவை பார்த்து பலருக்கு வியப்பாகத்தான் இருந்திருக்கும். அவரா இவர் என்று சொல்லும் வகையில் தான் பலர் அவருடைய மூக்கு கண்கள் என ஒவ்வொன்றாக ஒப்பிட்டு பார்த்து ஆமாம். அதுபோலத்தான் இருக்கிறது. அப்போ கனகா தான் என்றெல்லாம் கூறி வந்தனர். இவருடைய சொந்தப் பெயர் லட்சுமி பிரியா தானாம். ஏடி தேவதாஸ் மற்றும் நடிகை தேவிகாவுக்கு பிறந்தவர் தான் நடிகை கனகா. கனகா 1973 இல் தான் பிறந்திருக்கிறார். இவர் இரட்டை சகோதரிகளோடு பிறக்கும்போது இவரோடும் பிறந்த சகோதரி பிறக்கும்போது இறந்து போய்விட்டாராம்.

தந்தையின் கொடுமை

தந்தையின் கொடுமை

கனகா குழந்தையாக அதுவும் மூன்று மாதமாக இருக்கும்போதே அவருடைய அப்பா அம்மாவுக்கு ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து விட்டார்களாம். அப்பாவுடைய அரவணைப்பு இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே கிடைத்ததே இல்லையாம். இவருடைய அம்மா தான் இவரை முழுமையாக பார்த்து வளர்த்திருக்கிறார். கனகா ஸ்கூல் படிக்கும்போதே இவருடைய காட்பாதராக இவருடைய மாமா பெயரை வைத்திருந்தாராம். அதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இவருடைய அப்பா ஸ்கூலில் வந்து அனைவரும் முன்னிலையிலும் நான் இருக்கும்போது எப்படி வேறு ஒருவருடைய பெயரை வைக்கலாம் என பெரிய அளவில் பிரச்சனை செய்து விட்டாராம்.

முதல் திரைப்படம்

முதல் திரைப்படம்

ஆறுவது ஆறாம் வகுப்பு படிக்கும் போது இருந்த அதே மனக்கசப்பு 16 வது வயதிலும் தொடர்ந்து இருக்கிறது. இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் இப்போது ராமராஜன் நடித்த கரகாட்டம் திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது அந்த திரைப்படத்தில் இவர் நடிக்கக் கூடாது என்று இவருடைய அப்பா அதிக அளவில் பிரச்சினை செய்தாராம். ஆனாலும் கங்கை அமரன் இவருக்கு இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார். அந்த திரைப்படத்தின் மூலமாகத்தான் இவர் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அதிக அளவில் பிரபலம் அடைந்து விட்டார். ஒரு வருடத்திலேயே எட்டு படங்களை நடித்து முடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த அதிசய பிறவி திரைப்படம் வெற்றி பெற்றது போலவே இவர் பத்தாம் வகுப்பு தேர்விலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

தனிமையை தேடும் காரணம்

தனிமையை தேடும் காரணம்

இந்த நிலையில் இவருடைய அம்மாவின் இறப்பு இவரை அதிகமாக பாதித்துவிட்டதாம். அம்மா மட்டுமே தனக்கு உலகம் என்று நினைத்துக் கொண்டிருந்த கனகாவின் அம்மாவின் இறப்பு இவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள காரணமாக இருந்ததாம். இந்த நிலையில் தான் இவரைப் பற்றி பல்வேறு பொய்யான தகவல்கள் பரவி வந்தது. இவருக்கு கேன்சர் அதனால் இறந்து விட்டார் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் அதனை பொய் என்று சொல்லும் விதமாக கடந்த வருடம் இவர் வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அதற்குப் பிறகு மீண்டும் இவர் வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த நிலையில்தான் தற்போது இவருடைய வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இவரை இவருடைய ரசிகர்கள் பலர் மிஸ் பண்ணி வருவதாக சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+