இப்படி ஒரு பர்சனாலிட்டியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டதே இல்லை..அசீம் குறித்து பனிமலர் பகிர்ந்த பதிவு
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 102 வது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது.
கடைசி வாரத்தில் போட்டியாளராக இருக்கும் அசீம் குறித்து செய்தி வாசிப்பாளர் பனிமலர் பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
இதுவரைக்கும் இப்படி ஒரு டாக்ஸிக் பர்சனாலிட்டியை பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் கண்டதே இல்லை என்று அசீம் குறித்து பனிமலர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இரண்டு விதமான கருத்துக்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் இந்த சீசனில் கடைசி ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக அசீம் இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே சண்டை சச்சரவுகளில் தவறாமல் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் ஒரு நபராக அசீம் இருப்பது ரசிகர்களின் மத்தியில் அவருக்கு ஒரு பக்கம் ஆதரவு ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், ஒரு பக்கம் நெகட்டிவ் கருத்துக்களையும் இப்படியும் சில கேரக்டர்கள் இருக்கிறார்களா என்று பல்வேறு கேள்விகளையும் சமூக வலைத்தளத்தில் எழுப்பி வருகின்றது.

டைட்டில் ஜெயிக்க யாருக்கு வாய்ப்பு
இந்த நிலையில் கடைசி வாரத்தில் தற்போது வந்து இருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் ஐந்து போட்டியாளர்கள் குறித்தும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தும், சிலர் அவர்களை கலாய்த்து திட்டியும் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர் .அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ஜெயிக்கப் போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. அதில் அதிகமான ரசிகர்கள் விக்ரமன், அசீம், ஷிவின் இவர்கள் மூவரில் ஒருவருக்கு தான் டைட்டில் ஜெயிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கூறி வருகின்றனர். ஆனால் அசீம் மற்றும் விக்ரமன் ரசிகர்கள் மாறி மாறி கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

பனிமலர் கருத்து
அந்த வகையில் அசீமை குறித்து ஏற்கனவே அவரோடு சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு எதிரான பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். அசீம் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் சன் நியூஸ் செய்தி வாசிப்பாளராகவும் ஒரு தொகுப்பாளராகவும் இருக்கும் பனிமலர் தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கெட்ட வார்த்தை தான் ஆனால் மன்னித்து விடுங்கள் 200% உண்மை இந்த மாதிரி கேவலமான ஒருத்தரை நான் பார்த்ததே இல்லை என்று அசீம் குறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு நபர் வெளியிட்ட பதிவையும் பகிர்ந்து இருக்கிறார்.

சப்போர்ட் இவருக்கு தானாம்
அந்தப் பதிவில் அசீம் பற்றி தரக்குறைவாக பல வார்த்தைகள் கூறப்பட்டிருக்கிறது. அதை விக்ரமன் ரசிகர்கள் பலர் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர் ஆனால் அசீமுடைய ரசிகர்கள் இந்த பதிவு வெளியிட்டதற்கு கண்டனம் கூறி வருகின்றனர் .இந்த நிலையில் ஒரு பிரபலம் அசீமுக்கு எதிராக சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .இந்த நிலையில் செய்தி வாசிப்பாளர் பணிமலர் தன்னுடைய ஆதரவு இந்த சீசனில் ஷிவினுக்கு தான் என்று கூறி ஒரு பதிவு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார் .ஆரம்பத்தில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு பிடித்த போட்டியாளர் என்றால் அவர் ஷிவின் தான் அவர்தான் சரியாகவும் விளையாட்டை புரிந்து கொண்டும் விளையாடி வருகிறார் என்று ஷிவினை பாராட்டியும் இருக்கிறார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications