நம்ம CM ரீல்ஸ் முதல்வர் தானே! அவரிடம் நான் வைக்கும் வேண்டுகோள்.. பேரரசு சொன்ன விஷயம்! கைதட்டிய வனிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குனர் பேரரசு சமீபத்தில் 3.0 படத்தின் பிரமோஷனில் பேசிய விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது‌ அதில் அவர் நம்ம முதல்வரே ரீல்ஸ் முதல்வர் தான். அவரை அப்படித்தானே எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் சோசியல் மீடியாவில் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்து தெரிவிக்கும் நபர்களை கைது செய்து சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயக்குனர் பேரரசு வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.

இயக்குனர் பேரரசு பேட்டி

இயக்குனர் பேரரசு ஆரம்பத்தில் இருந்து முதல்வர் விஜய்க்கு சப்போட்டாகவே பேசி வருகிறார். எங்கள் துறையில் இருந்து ஒருவர் முதல்வராக ஆகி இருக்கிறார், அவருக்கு என்னுடைய முழு சப்போர்ட் இருக்கு என்று சொல்லி இருக்கிறார். அதுபோல இன்னும் சில இடங்களிலும் முதல்வர் விஜய்க்கு சப்போட்டாகவே பேசி இருக்கிறார். இப்படி இருக்கையில் இப்போது 3.0 படத்தின் ப்ரோமோஷனில் அவர் கலந்து கொண்டு பேசியிருந்தார். அந்த படத்தில் கதாநாயகியாக ரீலீஸ் அக்கா என்று இன்ஸ்டாவில் அழைக்கப்படும் அர்ணிகா தான் நடிக்கிறார். அவரை பற்றி பேச ஆரம்பிக்கும்போது, அதற்கு முன்பு அரணிக்கா கண் கலங்கி அழுதது குறித்து பேரரசு பேசினார்.

நெகட்டிவ் கமெண்ட் பிரச்சனை

நீங்க இதற்கு முன்பாக சோசியல் மீடியாவில் பட்ட அவமானங்களும், நெகட்டிவ் கமாண்டுகளை பற்றி பேசினீங்க அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நம்ம முதல்வரே ரீல்ஸ் முதல்வர் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அரசியலிலாக இருந்தாலும் சரி நடிப்பாக இருந்தாலும் சரி பெண்கள் வரும்போது அவர்கள் அதிகமாக தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இதுபோல முகம் தெரியாமல் சிலர் பேசுவது அரசியலுக்கு வர வேண்டாம் நடிக்க போக வேண்டாம் என்று பெண்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி விடுகிறது.

Vijay Director Perarasu

கைது செய்ய வேண்டும்

அந்த பயம் தான் மோசமாக கமெண்ட் போடுறவனுக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. அதனால் நீங்கள் யாருமே தயங்க வேண்டாம். முதல்வருக்கு இந்த நிகழ்ச்சி மூலமாக நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன், சோசியல் மீடியாவில் இதுபோல ஆபாசமாகவும், மோசமாகவும் கமெண்ட் போடும் நபர்களை கண்டுபிடித்து 1000, 2000 பேரை மொத்தமாக அரெஸ்ட் செய்தால்தான் மத்தவங்களுக்கு பயம் வரும். பிரதமர் வீடியோ போட்டாலும் அவரையும் திட்டி கமெண்ட் போடுகிறார்கள், முதலமைச்சர் வீடியோ போட்டாலும் திட்டுகிறார்கள். நடிகைகள் போஸ்ட் போட்டாலும் அதிலும் ஆபாச கமெண்ட்களை போடுகிறார்கள்.

கைதட்டிய வனிதா

பாத்ரூமில் ஒரு காலத்தில் எழுதி வைப்பாங்களே அதே போல இப்போ கமெண்ட்களில் மோசமான வார்த்தைகளில் எழுதுகிறார்கள். தமிழ் என்று நாம் தமிழுக்காக சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த மாதிரி மோசமாக கமெண்ட் எழுதுகிறவர்களுக்கு தமிழில் கூட எழுத தெரிய மாட்டேங்குது. அப்படி இருக்கும்போது கெட்ட வார்த்தையையும் தப்பு தப்பாக எழுதி வைக்கிறானுங்க. இப்படிப்பட்டவங்களுக்காக யாரும் பயப்பட வேண்டாம் என்று பேரரசு பேச, அதற்கு வனிதா கைதட்டி தனது மகிழ்ச்சியை காட்டி இருக்கிறார். இந்த வீடியோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+