For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிறந்தநாளில் அனிதா சம்பத் வெளியிட்ட கண்ணீர் வார்த்தைகள்.. இந்த சூழலில் பலருக்கும் தேவையானது தானாம்

Google Oneindia Tamil News

சென்னை: செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் தன்னுடைய தந்தையின் பிறந்த நாளில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

பெற்றோர் மீது பாசத்தை காட்டி அனிதா சம்பத் வெளியிட்ட பதிவு பலருடைய பாராட்டை பெற்று வருகிறது.

தந்தையின் மறைவுக்குப் பிறகு கொண்டாடிய பிறந்த நாளில் எவ்வளவு வலிகள் நிறைந்திருக்கும் என்பதை அனிதா சம்பத் காட்டியதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

தமிழில் காணாமல் போன தெய்வம் தந்த வீடு சீரியல் கதாநாயகி தற்போதைய நிலை... இப்படி மாறிவிட்டாரே!?தமிழில் காணாமல் போன தெய்வம் தந்த வீடு சீரியல் கதாநாயகி தற்போதைய நிலை... இப்படி மாறிவிட்டாரே!?

தந்தையும் பத்திரிக்கையாளர்

தந்தையும் பத்திரிக்கையாளர்

செய்தி வாசிப்பாளராகவும், ஒரு நடிகையாகவும், பிக் பாஸ் பிரபலமாகவும் ,விளம்பர மாடலாகவும், டான்ஸ் டைட்டில் வின்னர் ஆகவும் பலருக்கும் பரீட்சையமான அனிதா சம்பத் தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவருடைய மறைந்து போன தந்தையை நினைத்து உருக்கமாக அதில் வார்த்தைகளை பகிர்ந்து இருக்கிறார். அனிதா சம்பத்தின் தந்தை ஆர் சி சம்பத் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஒரு பத்திரிக்கையாளரான இவர் தாய் வார இதழில் பணிபுரிந்து இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தமிழில் பல வார இதழ்களிலும் இவர் கட்டுரைகள் வெளியாகி இருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் எழுதி இருக்கிறார். அனிதா கலந்து கொண்ட பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியின் அறிமுக மேடையிலே கமல் ஆர் சி சம்பத் பற்றி பேசி இருப்பார்.

தந்தையின் எதிர்பாராத மரணம்

தந்தையின் எதிர்பாராத மரணம்

அனிதா சம்பத் தான் ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களையும் தன் குடும்ப நிலையையும் பற்றி பல முறை கிடைக்கும் இடங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருப்பார். குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அவர் அதிகமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் தான் அனிதா சம்பத் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ஒரு சில நாட்களில் தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்ற ஆர் சி சம்பத் சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அந்த நிலையில் தன்னுடைய தந்தையின் பிரிவு பற்றி வருத்தத்தில் இருந்த நேரத்தில் தான் வந்த முதல் பிறந்த நாளில் அனிதா சம்பத் ஒரு பதிவையும் வெளியிட்டு இருந்தார்.

மகளின் மன வருத்தம்

மகளின் மன வருத்தம்

தற்போது இன்று அவருடைய தந்தையின் பிறந்த நாளில் அதே பதிவை மீண்டும் பதிவிடுகிறேன் என பதிவிட்டு, "அப்பாவுக்கு இன்னைக்கு பிறந்தநாள். போன வருடத்தின் இந்த பதிவை மீண்டும் பதிவிடுகிறேன். இதைவிட என் மன ஓட்டத்தை சரியாக சொல்ல வேறு பதிவை எழுதி விட முடியாது. பண்டிகை நாளில் பிறந்த நாள் வருவது வரம் என நினைத்தவள், அது ஒரு பாரம் என தெரிகிறது அவர்களை இழந்த பின்பு. நல்ல நாளில் மன வேதனையோடு பண்டிகையை கொண்டாடும்போது., நாங்கள் கட்டிய வீட்டை நீ பார்த்து இருக்க வேண்டும் அப்பா, என் பொண்ணு 29 வயதிலேயே பெரிய வீடு கட்டி இருக்கான்னு ஊரெல்லாம் போன் பண்ணி சொல்லி பெருமை பட்டு இருப்ப, பல பிள்ளைகள் நல்ல இடத்திற்கு வர போராடும் போதெல்லாம் இருக்கும் பெற்றோர் அவர்கள் நினைத்ததை அடைந்த பின் திரும்பிப் பார்க்கும்போது ஏனோ இருப்பதில்லை.

சகோதரியின் வேண்டுகோள்

சகோதரியின் வேண்டுகோள்

இப்போ அம்மா இருந்தா நல்லா இருக்குமே, இப்போ அப்பா இருந்தா நல்லா இருக்குமென்று, ஏங்க வச்சுட்டாங்க. என்னைப் போன்றே குடும்பத்தில் ஒருவரை இழந்து வலிகளோடு சிரித்துக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இந்த அன்பு தோழியின் virtual hug . பெற்றோர் கூடவே இருக்கும்போது நல்லா பாத்துக்கோங்க என்னும் அன்பு வேண்டுகோள் அப்பாவா அம்மாவா நண்பனா எல்லாமாக என் கண்ணீரை துடைத்து, விடுடா கண்ணு குட்டி எது நடந்தாலும் பார்த்துக்கலாம்னு நான் இன்னைக்கு உயிரோட இருக்க காரணமான என் பெற்றோருக்கும் மகனாய் இருந்து பார்த்துகிட்ட இன்னும் இன்னும் பார்த்துக்கிற என் உலகத்துக்கு மிக்க நன்றி என்று அனிதா சம்பத் பதிவிட்டு இருக்கிறார். இது தற்போதைய சூழலில் பலருக்கும் ஏத்த அறிவுரை தான் என்று ரசிகர்கள் இதைப் பாராட்டி வருகிறார்கள்.

English summary
Newsreader Anitha Sampath has posted an entry on her father's birthday.Anitha Sampath's post showing affection for her parents is getting appreciation from many people.Fans have been commenting that Anitha Sampath has shown how painful the birthday celebration can be after the death of her father.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X