ராபர்ட் மாஸ்டரின் உண்மைகுணம் இதுதான்.. உண்மையை உடைத்த ரச்சிதா.. பிறகு தான் தெரிந்தது!?
சென்னை: தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ரச்சிதா முதல் முறையாக ராபர்ட் மாஸ்டர் பற்றி பல தகவல்களை கூறி இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் பின்னாடியே சுற்றிக் கொண்டிருந்தது பலருக்கும் தெரிந்ததாக இருந்தாலும் அவருடைய நிஜ கேரக்டரை பற்றி ரச்சிதா முதல்முறையாக பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் ராபர்ட் மாஸ்டர் கலந்து கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது ரச்சிதா பேசியதை குறித்து நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகிறார்கள்.

வளர்ந்த குழந்தை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய ரச்சிதா இன்று முதல்முறையாக விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டாரின் அதிகாரப்பூர்வமான இணையதள பக்கத்திலிருந்து லைவில் ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதில் பல்வேறு சுவாரசியமான தகவல்களை பற்றி பேசி இருக்கிறார். குறிப்பாக ரசிகர்கள் பலரும் ராபர்ட் மாஸ்டர் பற்றி அவரிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும அதனால் அவரைப் பற்றி சில தகவல்களை கூறி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது ராபர்ட் மாஸ்டர் உண்மையிலே ஒரு வளர்ந்த குழந்தையாக தான் இருந்து வந்தார். அவர் என்னதான் வெளியில் பெரிய பார்ப்பதற்கு பெரிய ஆளாக தெரிந்தாலும் மனதில் குழந்தைத்தனமாக தான் இப்ப வரைக்கும் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

ஜாலியான என்டர்டைன்மென்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது வெளியே வேறு விதமாக காட்டி இருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டர் எப்போதும் என்னை கலாய்த்துக்கொண்டு என்னை சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்த நபர்தான். நான் அவரை பலமுறை திட்டி இருக்கிறேன், முறைத்திருக்கிறேன். அவர் பேசுவது சில நேரங்களில் எனக்கு அதிக பிரசிங்கித்தனமாக இருக்கும்போது நான் என்ன செய்தாலும் அவர் அதை கண்டு கொள்வதே இல்லை. அடுத்த நேரமும் அதைத்தான் செய்து கொண்டிருப்பார். ஒரு ஜாலியான என்டர்டைன்மெண்ட் எனக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் ராபர்ட் மாஸ்டரால் கிடைத்து வந்தது என்று கூறியிருக்கிறார்.

நடிக்கவில்லை
ராபர்ட் மாஸ்டரை போன்று பல்வேறு நபர்கள் நாம் வேலை பார்க்கும் இடத்திலும், படிக்கும் போதிலும், வெளியே செல்லும் இடத்திலும் கூட நடக்க தான் செய்யும் ஆனால் அதற்காக நாம் எப்போதும் கோபப்பட்டுக் கொண்டே இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது என்பதை நான் ஏற்கனவே புரிந்து இருக்கிறேன். அதுபடி தான் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தேன் என்னுடைய நிலை தவறாமல் எப்போதும் நான் இருப்பது போன்று பிக் பாஸ் வீட்டிற்குள் நான் இருந்ததால் தான் எனக்கு ரசிகர்கள் இத்தனை நாட்கள் ஆதரவு தந்திருக்கிறார்கள் .ஆனால் இதை விட நானும் கொஞ்சம் அதிகமாக நடித்திருந்தால் கடைசி வரைக்கும் சென்று இருக்கலாமாக இருக்கும் இன்றும் கூறியிருக்கிறார்.

ரசிகர்களின் கருத்து
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சிகள் இருக்கும்போது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் பழகும் முறையை குறித்து சமூக வலைதளத்தில் அதிகமான ரசிகர்கள் பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பு இல்லையா? என்று கேள்விகளை எழுப்பி கொண்டு இருந்த நிலையில், தற்போது ரச்சிதா பேசிய வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் ஒரு பக்கம் அவருடைய கருத்தை ஆதரித்து வந்தாலும் இன்னொரு பக்கம் அவருடைய கருத்தை கலாய்த்து வருகின்றனர். ஏற்கனவே அவர் வீட்டுக்குள் இருக்கும்போது ராபர்ட் மாஸ்டர் செய்யும் செயல்களுக்கு ரச்சிதா ஆமோதிக்கும் விதமாகத்தான் நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டியது போலத்தான் இப்போதும் ராபர்ட் மாஸ்டர் செய்வது தவறு என்று தெரிந்தால் முகத்துக்கு நேராக திட்டி இருக்க வேண்டியதுதானே என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications