அசீம் வெற்றியை விமர்சித்து ஷிவின் வெளியிட்ட முதல் வீடியோ.. இதனால்தான் அவர் ஜெயித்தாரா?கூறிய காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது.

இந்த சீசனில் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இரண்டாவது ரன்னர் அப் ஆக ஷிவின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்

இந்த நிலையில் முதல் முறையாக டைட்டில் ஜெயித்த அசீம் பற்றி இரண்டாவது ரன்னராக வந்த ஷிவின் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறியிருக்கிறார்.

எதிர்பாராத வெற்றி

எதிர்பாராத வெற்றி

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் எதிர்பாராத நிகழ்வுகள் கடைசி நேரத்தில் நிகழ்ந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் இரண்டு நாட்களாக அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் இறுதி கட்டத்தில் இருந்த மூன்று போட்டியாளர்களில் விக்ரமன், அசீம், ஷிவின் மூவரில் விக்ரமன் மற்றும் ஷிவினுக்கு அதிகமான ரசிகர்கள் ஜெயிக்க வேண்டும் என்று கூறி வந்தனர். ஆனால் கடைசியில் அசீம் ஜெயித்திருந்தார். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக ஷிவின் இந்த நிகழ்ச்சியை பற்றியும் தனக்கு இதுவரைக்கும் வாக்கு செலுத்தி வந்து தனக்கு ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூறியும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

சோகம் கிடையாது

சோகம் கிடையாது

அதில் என்னுடைய சமூகத்திற்கு மக்களிடம் கிடைத்த அன்பாக தான் நான் இந்த வெற்றியை பார்க்கிறேன். நான் ஆரம்பத்தில் நான்கு வாரம் கூட இந்த வீட்டிற்குள் இருக்க மாட்டேன் என்றுதான் நினைத்து வந்தேன். ஆனால் மக்கள் என்னை ஏத்துக்கிட்டு அவங்க பொண்ணு மாதிரி எனக்கு ஓட்டு போட்டு இருக்காங்க, இதை நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது. நான் தோற்றுவிட்டேன் என்று சோகம் எல்லாம் எனக்கு கிடையாது. ஏனென்றால் நான் நூறு நாட்கள் இந்த வீட்டிற்குள் இருந்தது எனக்கு பெருசு தான். மூன்றாவதாக நான் வெற்றி பெற்றதும் எனக்கு பெருசாகவும் பெருமையாகத்தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

கோவம் தான் பிடிக்காது

கோவம் தான் பிடிக்காது

அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் அதுபோல எனக்கு ஓட்டு போட்டு இத்தனை நாட்கள் எடுத்துக் வந்த மக்களுக்கும் நன்றி, இதற்குப் பிறகும் மக்களுக்கு நான் பல நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். அப்போது அசீம் மற்றும் விக்ரமன் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அசீம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அவருடைய கோபம் தான் எனக்கு பிடிக்காது. மத்தபடி அவர் ஒரு நல்ல மனிதர். ஒரு நல்ல நண்பரும் கூட, அவர் வெற்றி பெற்றது மக்களால் அவருக்கு கிடைத்த வெற்றி. மக்கள் தான் அவருக்கு ஓட்டு போட்டு அவரை வெற்றி பெற வெச்சிருக்காங்க.

மக்களால் கிடைத்த வெற்றி

மக்களால் கிடைத்த வெற்றி

அதனால் அசீமுடைய வெற்றியைப் பற்றி நாம் எதுவும் பேசி குறை கூற முடியாது. மக்களுக்கு ஏதோ ஒன்று அசீமிடம் பிடித்திருக்கிறது. அதனால் எங்களை விட அசீமிற்கு அதிகமான ஓட்டு கிடைத்து ஜெயித்து இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் விக்ரமனுடைய தோல்வியைப் பற்றி கேள்வி கேட்டதற்கு விக்ரம் தான் இந்த சீசனில் டைட்டில் ஜெயிப்பார் என்று கடைசி வரைக்கும் நான் நம்பினேன் .ஆனால் வீட்டிற்குள் வந்தவர்கள் கூட விக்கிரமன் தான் டைட்டில் வின் பண்ண போகிறார் என்று தான் அனைவரும் கூறிக் கொண்டிருந்தார்கள். அனைவரும் அப்படித்தான் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க. ஆனால் அசீம் ஜெயித்து விட்டார். ஆனாலும் விக்ரமன் ஜெயித்திருந்தால் நல்லா இருந்திருக்கும். ஆனா அசீமுடைய வெற்றி மக்களால் கொடுக்கப்பட்டது அதனால் அதை எந்த குறையும் கூற முடியாது என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+