பல அசீம்களால் தினமும் கஷ்டப்படுகிறோம்.. ஷிவினை பாராட்டிய.. திருநங்கை தனுஷா கூறிய வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக வந்த ஷிவினை பாராட்டி திருநங்கை தனுஷா சிங்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஒரு புத்தக எழுத்தாளராகவும், பல் மருத்துவராக இருக்கும் திருநங்கை தனுஷா சிங்கம் அசீம் பற்றி பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார்.

அசீன் மீது ஆரம்பத்தில் அதிகமான கோபம் வந்ததாகவும், ஆனால் அவர் சமூகத்தில் வெளிப்பாடாகத்தான் இருப்பதாக தான் இப்போது மனம் மாறிவிட்டேன் என்று கூறி இருக்கிறார்.

சமுதாயத்தில் அசீம் போன்ற பலர் இன்னும் திருநங்கைகளின் மீது தங்களுடைய வன்மத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று பல்வேறு தகவல்களை தனுஷா சிங்கம் பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் டிவிக்கு பாராட்டு

விஜய் டிவிக்கு பாராட்டு

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்களும் பதிவுகளும் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில்தான் ஷிவினுடைய வெற்றியை பாராட்டியும் அதே நேரத்தில் இந்த சீசனில் டைட்டில் ஜெயித்த அசீமுடைய கேரக்டர் பற்றியும் திருநங்கை தனுஷா சிங்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஆரம்பத்தில் இருந்து விஜய் டிவியில் திருநங்கைகளுக்கு கிடைக்கும் ஆதரவு பற்றி அவர் நன்றி கூறி இருக்கிறார். ஆரம்பத்தில் 2007 இல் இப்படிக்கு ரோஸ் என்கிற நிகழ்ச்சியில் முதல் முறையாக திருநங்கையை தொகுப்பாளராக அறிமுகப்படுத்தி இப்ப வரைக்கும் தங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என்று விஜய் டிவியை பாராட்டி இருக்கிறார்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

அதுமட்டுமில்லாமல் ஆரம்பத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய சமுதாயத்தை பற்றியும் தான் என்ன மாதிரி வாழ போக வேண்டும் என்பதை பற்றியும் தெளிவாக பேசி இருந்தார். அதற்குப் பிறகு அதிகமான ரசிகர்கள் ஷிவினுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். அதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என்று கூறி இருக்கிறார். எங்கள் வீட்டுப் பிள்ளையை உங்கள் வீட்டுப் பிள்ளையாக நீங்கள் ஏற்றுக் கொண்டு இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறீர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியில் மேடையில் எங்களை ஒருவரை நிறுத்தி வைத்து அழகு பார்த்த ரசிகர்களுக்கு நன்றி என்று கூறியிருக்கிறார்.

பல அசீம்கள் இருக்கின்றனர்

பல அசீம்கள் இருக்கின்றனர்

அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் அசீம் பற்றி நான் ஆரம்பத்தில் அதிகமாக கோபப்பட்டு இருக்கிறேன். ஷிவினிடம் நடந்து கொள்ளும் விதம் ஷிவினை பற்றி உருவ கேலி செய்வது ஷிவின் பாத்ரூமில் குளிப்பதை பற்றி பேசுவது போன்ற பல்வேறு விஷயங்களை பேசும்போது எனக்கு அதிகமான கோபம் பட்டு அவரைப் பற்றி பல்வேறு கருத்துகளையும் கூறியிருக்கிறேன். பிறகு தான் எனக்கு புரிந்தது அவரைப் போன்று பலர் சமுதாயத்தில் இருந்து வருகிறார்கள்.அவர்களை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். பல அசீம்களை சமுதாயத்திலும் சரி சமூக வலைத்தளத்திலும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

சமுதாயத்தின் வெளிப்பாடு

சமுதாயத்தின் வெளிப்பாடு

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அசீம் சமுதாயத்தின் வெளிப்பாடாகத்தான் நடந்து கொள்கிறார் . அதனால் அவருக்கு நன்றி தான் கூற வேண்டும். அவர் அப்படி நடந்து கொள்வதால் தான் ரசிகர்களின் மத்தியில் ஷிவினுக்கு மேலும் அதிகமான நல்ல மதிப்பு ஏற்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நடப்பதை அப்படியே வெளியே காட்டுவதால் தான் ஷிவனுக்கு நடக்கும் பல அவலங்கள் ரசிகர்களுக்கு தெரிய துவங்கியது. அதனாலயே அவருக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர். அது மட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு திருநங்கைகளின் மீது மக்களுக்கு இருக்கும் பார்வை மாறினால் நல்லது என்று கூறி இருக்கிறார்.

அது ஏமாற்றம்தான்

அது ஏமாற்றம்தான்

அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மறக்க முடியாத மற்றும் வேதனை படக்கூடிய நிகழ்வு என்றால் ப்ரீஸ் டாஸ்க். அனைவருடைய பெற்றோர்களும் கலந்து கொண்டு தங்களுடைய ஆதரவை தெரிவித்தார்கள். ஆனால் அந்த நேரத்தில் ஷிவினுடைய குடும்பத்தினர் யாரும் வரவில்லை. அவருடைய அம்மா அப்பா பாண்டிங் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கிறதற்காக ரொம்பவே ஆவலாக இருந்தேன். ஆனால் அது நடைபெறவில்லை. அது பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இது ஷிவனுக்கு மட்டுமல்ல இன்னும் ஷிவினைப் போல அதிகமானோர் இதே சூழ்நிலையில் தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று உருக்கமாக கண்கலங்கி பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+