Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனம் திறந்து மன்னிப்பு கேட்பு..என்ன இருந்தாலும் நமிதாவுக்கு வெள்ளை மனசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: செஞ்சது தப்பு என்று தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்டு விடவேண்டும் என்று தற்போது தாமரைச்செல்வி நிரூபித்துவிட்டார்.

Recommended Video

    Bigg Boss வீட்ல Namitha Marimuthu எல்லாருக்குமே Toughஆ இருப்பா| Transgender Jaya Exclusive Interview

    விளையாட்டா பேசிய வார்த்தை இவ்வளவு பெரிய விபரீதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை.

    என்னதான் பேசினாலும் மன்னிப்பு கேட்டதும் அதை பெருந்தன்மையாக மன்னித்துக்கொண்ட நமிதாவுக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.

    பிரபலமான போட்டியாளர்கள்

    பிரபலமான போட்டியாளர்கள்

    பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு சீசனும் வெற்றியை பார்த்து தான் தற்போது 5 வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கிறது .இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தாலும் ரசிகர்களின் மனதில் ஒரு சில போட்டியாளர்கள் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட்டனர். அதில் தாமரைச்செல்வி, நமீதா, பாவனி ரெட்டி,பிரியங்கா, மற்றும் பலர் இருக்கின்றனர்.ஆனால் நேற்று நிகழ்ச்சியில் ஒரு சில விசயங்கள் ரசிகர்களின் மத்தியில் பழைய..சீசன்களை..நினைவுபடுத்த தொடங்கி இருக்கிறது..!ஆனால் கடைசியில் இவர்கள் செய்த செயல்தான் அனைவரையும் ஆச்சரியத்தில்..!மூழ்க செய்திருக்கிறது.

    ஜாலியான சீசன்

    ஜாலியான சீசன்

    கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஐந்தாவது சீசன் சென்று கொண்டிருக்கும் நேரத்தில், தாமரைச்செல்வி விளையாட்டாக ஆரம்பித்த செயல் வினையாக முடிந்திருக்கிறது. இவர் ராப் வாக் நடக்கிறேன் என்று ஸ்டைலாக நடந்து காட்டி இருக்கிறார்...இவர் நடந்து கொண்டிருந்ததை பார்த்து அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கும் போது, தெரியாத்தனமாக தன் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல் நமிதாவை ௧லாய்திருக்கிறார்.ஆனால் இவர் பேச வந்த விதம் ஒன்றாகவும், ஆனால் பேசியது வேறொன்றாகவும் இருந்துவிட்டது என்று, கடைசியில் கண்ணீர் வடித்திருக்கிறார்.

    வார்த்தை தப்பாக மாறிவிட்டது

    வார்த்தை தப்பாக மாறிவிட்டது

    இவர் நடக்கும்போது கடைசியாக நமிதாவிடம் நீ பார்க்கிற மாதிரி மயக்குற பார்வையை எப்படி பார்க்க வேண்டும் என்று இவர் கேட்டிருக்கிறார். இது அனைவருக்கும் என்ன இவர் இப்படி கேட்கிறார் என்றுதான் தோன்றியிருக்கிறது. நமிதாவும் கூட அப்படித்தான் நினைத்து மயக்குற பார்வை என்றால் என்னது சிரிக்கிற மாதிரியா??முறைக்கிற மாதிரியா என்று சந்தேகத்தை தெளிவுபடுத்த கேள்வி கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு என்ன மாதிரி பதில் சொல்ல வேண்டும் என்று தெரியாத தாமரைச்செல்வி அதுதான் மயக்குற பார்வை என்று மீண்டும் கூறியிருக்கிறார். ஆனால் இவருடைய இந்த பதில் நமிதாவிற்கு கோபத்தை உண்டாக்கி இருக்கிறது. இவர் ஒரு விதமாக சொல்ல அதை நமிதா வேறுவிதமாக புரிந்து இருக்கிறார்.

    கோபத்தில் நமிதா

    கோபத்தில் நமிதா

    கடைசியாக இவர்களுக்குள் ஜாலியாக திருடன் போலீஸ் விளையாட்டு போன்ற ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் பிரியங்காவை நமிதா கண்டுபிடிக்க தவறியதால் அதனை நினைத்து நினைத்து தாமரைச்செல்வி சிரித்துக்கொண்டிருந்தார். இது நமிதாவிற்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தி விட்டது. அதனால் அவர் கோபமாக தாமரைச்செல்வி இடம் இதற்கு மேல் என்னிடம் எதுவும் பேசாதீர்கள் என்று கூறிவிட்டார். உடனே தாமரை செல்வியும் மன்னிப்பு கேட்கத் தொடங்கி நான் செய்தது இப்படி மனதை காயப்படுத்தும் என்று நினைக்கவில்லை தெரியாமல் இப்படி பேசி விட்டேன் என்று மன்னித்துவிடு நமிதா, என்று கேட்டதற்கு அவரும் முதலில் நான் பேசாமல் இருக்க மாட்டேன் ஆனால் இதை மறப்பதற்கு கொஞ்ச நேரம் தேவைப்படும் நானாக வந்து பேசுவேன் என்று கூறி அனுப்பி விட்டார்.

    அந்த மனசு பெருசு சார்

    அந்த மனசு பெருசு சார்

    தான் செய்தது தவறு என்று புரிந்து கொண்ட தாமரைச்செல்வி அதற்கு என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து தனியாக அமர்ந்து தூங்கி விட்டார். இதைப்பார்த்த நமிதா மனம் இரங்கி மீண்டும் தாமரைச்செல்வியை எழுப்பி அவரிடம் உள்ளே சென்று தூங்குங்கள் என்று கூறவும், மீண்டும் தாமரைச்செல்வி நான் தெரியாம அப்படி சொல்லிட்டேன் வேற ஒன்று நெனச்சி சொன்னேன் அது உன் மனதை இவ்வளவு காயப்படுத்தும் என்று தெரியாது என கூறியிருக்கிறார் அதற்கு நமிதா சரி விடுங்க நானும் மன்னித்துவிட்டேன். ஆனா நாம பேசினது வேற யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார். அதுமட்டுமல்லாமல் உங்களுக்கு காபி ஏதாவது வேணுமா என்று இவர் கேட்டது, இவருடைய ரசிகர்களின் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+