பட விழாவிற்கு வந்த இடத்தில் தேம்பி தேம்பி அழுத தர்ஷா குப்தா.. அவருக்கு நான் அப்படி என்ன பண்ணினேன்?
சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் கதாநாயகியாக மாறி இருக்கும் தர்ஷா குப்தா தற்போது அவர் நடித்த திரைப்படத்தின் பட வெளியீட்டு விழாவில் கதறி அழுது இருக்கிறார்.
தான் செய்யாத செயலை செய்ததாக சிலர் குற்றம் சாட்டுவதாக தர்ஷா குப்தா கூறி இருக்கிறார்.
ஏற்கனவே சமூக வலைதளத்தில் பரப்பரப்பை ஏற்படுத்தி தர்ஷா குப்தா மீண்டும் அழுது அனைவரையும் என்னவென கேட்க வைத்திருக்கிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்
சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, மொட்டை மாடி போட்டோஷூட் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடித்த நடிகை தர்ஷா குப்தாவை சமூக வலைத்தளத்தில் தெரியாதவர்களே இருக்க முடியாது. இவர் ஆரம்பத்தில் சின்னத்திரை நடிகையாக அறிமுகம் ஆகி இருந்தாலும் வெள்ளித்திரை நடிகைகளுக்கு இணையாக சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருக்கிறார். இவர் ஆரம்ப காலகட்டத்தில் சரியாக 4 மணிக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட்களை தட்டி விட்டு இளைஞர்களை இவருடைய பதிவிற்காக காத்திருக்க செய்தவர்தான். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

சீரியலில் அறிமுகம்
தர்ஷா குத்தா ஆரம்பமானது முள்ளும் மலரும் என்ற சீரியலில் தான். அதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மின்னலே சீரியலில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லி கேரக்டரிலும் நடித்திருந்தார். எத்தனை நாடகங்களில் இவர் நடித்திருந்தாலும் அந்த அளவிற்கு பிரபலமாகாமல் இருந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ரசிகர்களை கண்ணா பின்னாவென அலையவிட்டு இருந்த இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதும் இவருக்காகவே பலர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்ததாக கூறி வந்தனர்.

முதல் திரைப்படம்
இந்த நிலையில் இவருக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்திருந்தது. திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்டை வைத்து ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தை மோகன் இயக்கியிருந்தா.ர் இந்த படத்தில் நாயகியாக தர்ஷா குப்தா அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ராதாரவி, கௌதம் வாசுதேவ் என பல முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர். இந்த நிலையில் இதைத்தொடர்ந்து தற்போது ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துக் இருக்கிறார்.

உடை சர்ச்சை
ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் சன்னி லியோன் முதன்மையான கேரட்க்டரில் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவரோடு நடிகர் சதீஷ் டிக் டாக் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் நடைபெற்றது. அந்த நிகழ்வின் போது கூட தர்ஷாவின் உடையை குறித்து சதீஷ் பேசிய வார்த்தைகள் சமூக வலைதளத்தில் பல்வேறு கண்டனங்களை ஏற்படுத்தியது. சதீஷின் வார்த்தைக்கு தர்ஷாவும் கமெண்ட் கொடுத்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர்கள் இருவரும் சமாதானமாக ஆகிவிட்டார்களாம்.

அழுகைக்கான காரணம்
இப்போது இந்த படத்தின் ஃபிரி ரிலீஸ் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவை முடித்துவிட்டு வெளியே வந்த தர்ஷா குப்தா நான் அப்படி என்ன செய்தேன். அவர் என்னை ஏன் அப்படி ப்ராஜெக்ட் செய்கிறார் என்று தேம்பித் தேம்பி அழுதார், இதைக் குறித்து என்ன நடந்தது என்று அங்கு இருந்தவர்கள் கேட்டபோது, நான் நடந்து வந்த போது என்னுடைய அசிஸ்டன்ட் என்னுடைய ஆடையை மிதித்து விட்டார். என்று நான் அவரை திட்டியதாகவும் நான் திடீர் பிடித்தவள் என்பது போல ஒரு வீடியோவை வைரல் ஆக்கி வருகின்றனர். அப்படி செய்தவரை நினைத்து தான் எனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications