13 லட்சம் லாக்.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை ஏன்? சோக பின்னணி
சென்னை: விஜய் டிவியில் வெளியாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த நடிகை ராஜேஸ்வரி நேற்று திடீரென்று அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் தான் அவரது தற்கொலையின் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை பிராட்வே பகுதியில் குடும்பத்துடன் வசித்த வந்தவர் சீரியல் நடிகை ராஜேஸ்வரி (வயது 39). இவர் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்திருந்தார். அந்த சீரியலில் கதாநாயகி மீனாவின் தங்கையான சீதாவின் மாமியாராக நடித்திருந்தார்.

அதேபோல் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியாவிடம் வேலை பார்க்கும் கேரக்டரில் நடித்திருப்பார். இந்நிலையில் தான் நேற்று திடீரென்று ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார்.
ராஜேஸ்வரியின் கணவர் பெயர் சதீஷ். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் சென்றனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் தான் கணவர் சதீஷ் உடன் ஏற்பட்ட பிரச்சனையில் ராஜேஸ்வரி தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. டிசம்பர் 7ம் தேதி ஏற்பட்ட பிரச்சனையில் ராஜேஸ்வரி சைதாப்பேட்டை விஐபி சாலையில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றார்.
அதன்பிறகு அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். அளவுக்கு அதிகமாக ரத்த அழுத்த மாத்திரையை தின்றுள்ளார். இதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று இறந்தார்.
இந்நிலையில் தான் நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜேஸ்வரி தனது மகளினர் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த திட்டமிட்டார். இதற்காக அவர் தனது வீட்டின் குத்தகை பணம் ரூ.13 லட்சத்தை பயன்படுத்த நினைத்திருந்தார். ஆனால் அதற்கு கணவர் சதீஷ் ஒப்புக்கொள்ளவில்லை.
இந்த விவகாரத்தில் தான் ராஜேஸ்வரி - சதீஷ் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் விக்தியடைந்த ராஜேஸ்வரி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications