பிக்பாஸ் வெற்றி குறித்து பதிவு செய்து டெலிட் செய்த பிரபலம்..காரணம் இதுதானா? கலாய்க்கும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் வெற்றியை குறித்து இணையத்தில் பதிவு வெளியிட்டு யாஷிகா ஆனந்த் அதை டெலிட் செய்திருக்கிறார்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு தன்னுடைய முடிவிலிருந்து பிரபல நடிகையும் பிக் பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த் பின்வாங்கி இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டதும் அவருக்கு வாழ்த்து கூறி யாஷிகா ஆனந்த் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் சில மணி நேரம் கழித்து அந்த பதிவை யாஷிகா நீக்கி இருப்பது சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் அதிகமாக கலாய்க்கப்படும் ஒரு செயலாக இருக்கிறது.

எதிர்பார்க்காத வெற்றி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆன பிறகு சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களால் பேசப்படும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகி கொண்டிருக்கிறது. காரணம் இந்த சீசனில் டைட்டில் வின்னர் அசீம் தான் அவருக்கு டைட்டில் கொடுக்கக் கூடாது என்று ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் கடைசியில் அவருக்கு டைட்டில் கொடுக்கப்பட்டதும், ரசிகர்களால் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் சமூக வலைத்தளத்தில் அதிகமாக அசீமையும் பிக் பாஸ் நிகழ்ச்சி மற்றும் கமல்ஹாசனை திட்டி கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் பிரபலம்
அது மட்டுமல்லாமல் பல்வேறு பிரபலங்களும் தங்களுடைய அதிருப்தியை சமூக வலைதளத்தில் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஒரு சில ரசிகர்கள் அசீமுடைய வெற்றியை கொண்டாடி அவரை பாராட்டவும் செய்கின்றனர். அதுபோல சில பிரபலங்களும் அசீமிருக்கு வாழ்த்துக்களை கூறி இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு நபராகத்தான் யாஷிகா ஆனந்த் இருந்து வருகிறார். யாஷிகா ஆனந்த் நடிகையாக மட்டுமல்லாமல் மாடலாகவும், பிக்பாஸ் பிரபலமாகவும் இருந்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாஷிகா கலந்து கொண்டு ஒரு போட்டியாளராக பலருக்கும் பரிட்சயமானவர்தான்.

யாஷிகாவின் பதிவு
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி, இறுதியாக ஒரு தகுதியான வெற்றி. பிக் பாஸ் நான் ஏற்கனவே வேரூன்றி விட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஷிவின் வெற்றி ஏற்கனவே வெற்றி பெற்றது தான் என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால் திடீரென்று அந்த பதிவை நீக்கி இருக்கிறார். இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் அதிகமாக கேள்வி எழுப்பி வருகின்றனர். காரணம் ஷிவின் தான் வெற்றியாளர் என்று யாஷிகா நினைத்திருப்பாரோ அதனால் தான் ஷிவினுக்கு ஆதரவாக பதிவு போட்டுவிட்டு பிறகு அவர் ஜெயிக்கவில்லை என்று தெரிந்ததும் அதை டெலிட் செய்தாரா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

மக்களின் குரல்
ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் அசீம் உடைய வெற்றியை குறித்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலங்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி வெளியிட்ட கருத்தை திரும்ப பெற்றிருப்பதால் இதை குறித்து நெட்டிசன்கள் அதிகமாக சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அசீமுடைய ரசிகர்கள் பலர் மக்களின் குரல் என்கிற சில வாசகங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதற்கு விக்ரமன் மற்றும் ஷிவினுடைய ரசிகர்கள் பலர் பதில் கூறி வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications