மாதம்பட்டி ரங்கராஜ் இதோட நிறுத்திக்கோங்க! எச்சரித்த குரோஷி.. CWC 7ல் கலந்து கொள்ளாத காரணம் இதுதானா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த வாரம் மிகப் பிரமாண்டமாக தொடங்கியது. ஆரம்ப எபிசோடிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த சீசன், மீண்டும் ஒருமுறை காமெடி, கலாட்டா, சமையல் என கலந்த ஒரு முழு எண்டர்டெயின்மென்ட் பேக்கேஜாக அமைந்துள்ளது. முதல் வாரத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், இந்த சீசன் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஆனாலும் அதிகமான ரசிகர்கள் குரோஷி வரவில்லையே என்று அவரை மிஸ் பண்ணி வருகிறார்கள்.

குக் வித் கோமாளி சீசன் 7 ஆரம்பம்
இந்த சீசனிலும் வழக்கம்போல் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். அதுபோல புது நடுவராக நடிகை ரோஜாவும் கலந்து கொண்டிருக்கிறார். புதிய முகங்களும், பழைய பிரபலங்களும் இணைந்த இந்த சீசன் ஆரம்பத்திலேயே சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.
குரோஷி எங்கே?
ஆனால் இந்த சீசனில் ரசிகர்கள் முதலில் கவனித்த பெரிய விஷயம் என்னவென்றால், கடந்த சில சீசன்களில் தொடர்ந்து கோமாளியாக கலக்கிய குரோஷி இந்த முறை காணாமல் போனது தான்.
குரோஷி இல்லாதது ரசிகர்களுக்கு பெரிய குறையாகவே தெரிகிறது. "இந்த சீசன் நல்லா இருக்கு... ஆனா குரோஷி இல்லாதது ஒரு மிஸ்ஸிங் ஃபீல்" என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பழைய வீடியோக்கள் வைரல்
குரோஷி இந்த சீசனில் இல்லாததால், அவர் வந்த பழைய காமெடி கிளிப்புகள் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகின்றன. குறிப்பாக, மாதம்பட்டி ரங்கராஜன் உடன் அவர் செய்த கலாய்ப்பு வீடியோக்கள் ரசிகர்களை மீண்டும் சிரிக்க வைக்கிறது.
ஒரு வீடியோவில், "இதோட நிறுத்திக்கோங்க மாதம்பட்டி ரங்கராஜன்" என்று குரோஷி மிரட்டுவது போல காமெடியாக பேசும் காட்சி தற்போது அதிகம் பகிரப்படுகிறது. அது உண்மையில் மிரட்டல் அல்ல, அவர்களின் காமெடி டைமிங்கின் ஒரு பகுதிதான் என்றாலும், அதை பார்த்த ரசிகர்கள் அந்த காம்போவை மீண்டும் பார்க்க ஆசைப்படுகின்றனர்.
காமெடி காம்போ
குரோஷி - மாதம்பட்டி ரங்கராஜன் காம்போ இந்த நிகழ்ச்சியில் ஒரு ஹைலைட்டாக இருந்தது. செட்டிலேயே ரங்கராஜனின் குடும்ப வாழ்க்கையை கலாய்த்தது, ஜாய் கிரிஸில்டா வெளியிட்ட வீடியோக்களை ரீ-கிரியேட் செய்தது,பிறந்தநாள் வீடியோவில் கூட "உங்களுக்கு அவ்வளவு தான் மரியாதை" என்று காமெடியாக மிரட்டியது என இந்த மாதிரியான தருணங்களால்தான் அந்த ஜோடி ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது. அதனால் தான் இப்போது "இந்த காம்போவை ரொம்ப மிஸ் பண்ணுறோம்" என்று பலரும் கூறி வருகின்றனர்.
குரோஷி வராத காரணம்
குரோஷி இந்த சீசனில் இல்லாததற்கான காரணம் குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி, அவர் தற்போது ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதோடு, இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் சீரிஸின் இரண்டாவது பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
சுனைனா நடித்த இந்த சீரிஸின் ஷூட்டிங் வேலைகள் நடைபெற்று வருவதால், அதில் பிஸியாக இருப்பதால்தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்ற தகவல்கள் பரவி வருகின்றன.
ரசிகர்கள் வேண்டுகோள்
இந்த தகவல்கள் வெளிவந்தாலும், ரசிகர்கள் இன்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். "ஷூட்டிங் முடிஞ்சதும் குக் வித் கோமாளிக்கு திரும்பி வாங்க","வீக்கெண்ட் ஸ்பெஷலாக ஆனாலும் வரணும்" என்றெல்லாம் கமெண்ட்ஸ் மூலம் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மொத்தத்தில் பார்க்கும்போது, குக் வித் கோமாளி சீசன் 7 நல்ல வரவேற்புடன் சென்று கொண்டிருந்தாலும், குரோஷி இல்லாதது ரசிகர்களுக்கு ஒரு பெரிய குறையாகவே இருக்கிறது. அதே நேரத்தில், அவர் புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் பிஸியாக இருப்பது அவருடைய வளர்ச்சிக்கான ஒரு நல்ல அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications