செம்பருத்தி ஷபானாவோடு ஜோடி சேரும் அஸ்வின்...எந்த சீரியலில் தெரியுமா??
சென்னை: ஜீ தமிழில் தொடங்கப் போகும் புது சீரியலில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று செய்திகள் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சீரியலில் அஸ்வினுக்கு ஜோடியாக களம் இறங்கப் போவது ஷபானா என்ற செய்தி கேட்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

மீண்டும் சின்னத்திரையில் அஸ்வின்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பெரிய எதிர்பார்ப்போடு அடி எடுத்து வைத்த அஸ்வின் தற்போது மீண்டும் சின்னத்திரைக்கு வரப் போகிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும், ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்தவர் தான் அஸ்வின் இவருடைய சிரிப்புக்கு பல இளம்பெண்கள் ரசிகர்களாக மாறிவிட்டனர் .

சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்
சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் அஸ்வின் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். திரைப்பட விழா ஒன்றில் பேசிய பேச்சு அவருக்கு எதிராகத் திரும்பியது. அவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பல மீம்ஸ்கள் தினமும் அஸ்வினை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. மீம்ஸ்களை அனுப்பும் ரசிகர்களின் அன்புத் தொல்லையால் ஒருபக்கம் நொந்து போய்க் கொண்டிருக்கும் அஸ்வினுக்கு மற்றொரு பக்கம் ஆறுதலான செய்தி கிடைத்திருக்கிறது என்று அவருடைய தீவிர ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடிக்க போகிறார் என்ற செய்தி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சிதானாம்.

இறுதிகட்டத்தில் செம்பருத்தி
ஜீ தமிழில் டிஆர்பி யில் முன்னணியில் இருக்கும் சீரியல்களில் ஒன்றாக செம்பருத்தி சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியல் பல வருடங்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்ததில் பல நடிகர்கள் மாற்றமடைந்தாலும் சீரியல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதில் கதாநாயகியாக பார்வதி கேரக்டரில் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் ஷபானாக்கு ரசிகர்கள் அதிகமாக இருந்து வருகின்றனர். அது இந்த செம்பருத்தி சீரியல் முடிவடைய இருக்கும் இந்த நேரத்தில் இதன் அடுத்த பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகிஉள்ளது.

உண்மை விரைவில் தெரியும்
அப்போது அதில் மீண்டும் ஷபனா நடிப்பதாகவும் அதில் அவருக்கு ஜோடியாக அஸ்வின் ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்ற செய்திகள் வைரலாகி வருகிறது. ஆனால் இதை இப்ப வரைக்கும் அஸ்வின் உறுதி செய்யவில்லை. ஆனால் அதற்குள் அவருடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்த சீரியலில் ஏற்கனவே ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த கார்த்திக்ராஜ் விலகியதும் ரசிகர்கள் பலர் பீல் செய்து வந்தனர். தற்போது அதற்கு பிறகு இந்த சீரியலுக்கு டிஆர்பி குறையத் தொடங்கிவிட்டது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அஸ்வின் தொடர்ந்து நடித்தால் அவருக்காக டிஆர்பி அதிகரிக்குமா??இல்லையா??என்பது பொறுத்திருந்து பார்த்தால் தெரியும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications