போதிய சுகாதாரம், உணவு இல்லை.. திருவாரூர் நிவாரண முகாமில் பெண் மரணம்
திருவாரூர் கஜா நிவாரண முகாமில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர்: திருவாரூர் கஜா நிவாரண முகாமில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஜா புயல் பல லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. கஜா புயலால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

10 மாவட்டத்தில் மக்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் 2 லட்சம் பேர் வரை தற்போது முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிகள், அரசு கட்டிடங்களில் உருவாக்கப்பட்டு இருக்கும் தற்காலிக முகாம்களில் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
மாற்று உடைகளாக பழைய துணிகள் வழங்கப்படுகிறது. போதிய உணவுகள் வழங்கப்படுவது இல்லை. வழங்கப்படும் உணவுகளும் சுகாதாரமான நிலையில் இல்லை.
இந்த நிலையில் திருவாரூர் கஜா நிவாரண முகாமில் பெண் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோட்டூர் அருகே கோமளப்பேட்டை முகாமில் இருந்த பக்கிரியம்மாள் (65) பலியாகி உள்ளார். முகாமில் போதிய சுகாதாரம், உணவு இல்லாததால் உடல் நலிவடைந்த பக்கிரியம்மாள் பலி அடைந்ததாக கூறப்படுகிறது.
முகாமிற்கு வந்த போது இவர் நல்ல உடல்நிலையில் இருந்ததாகவும், முகாமில் சாப்பிட்ட உணவு மற்றும் தண்ணீர் காரணமாக உடல் நலிவடைந்து பக்கிரியம்மாள் பலியடைந்ததாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம்












Click it and Unblock the Notifications