கடைசி வரைக்கும் தெய்வம் கைவிடல.. லாட்டரியில் பரிசாக அடித்த 1 கோடி.. போராடி வாங்கிய மூதாட்டி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் தெருவோரம் வியாபாரம் செய்த வந்த மூதாட்டிக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு அடித்தது. ஆனால் அந்த லாட்டரி சீட்டை விற்பனை செய்த கடைக்காரர் அந்த மூதாட்டியை ஏமாற்றி ஒரு கோடியை அபேஸ் செய்ய முயற்சித்தார். எனினும் கடைசி வரை போராடிய மூதாட்டி நீதிமன்றம் வரை சென்று தற்போது அந்த தொகையை பெற்று இருக்கிறார்.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மாநில அரசே லாட்டரி விற்பனையை நடத்தி வருகிறது. பண்டிகை நாட்களை ஒட்டி பம்பர் லாட்டரிகள் போக, தினமும் அங்கு லாட்டரி குலுக்கல் விற்பனை நடைபெற்று வருகிறது. குலுக்கலில் முதல் பரிசு அடிப்பவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 கோடி வரை கிடைக்கிறது.

kerala lottery lottery prize scam

கடவுள் எப்பவாது நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க மாட்டாரா என்ற ஏக்கத்தில் பலரும் விருப்பப்பட்டு இந்த லாட்டரி சீட்டுகளை வாங்குகிறார்கள். அந்த வகையில், கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் தெருவோரம் கடை விரித்து வியாபாரம் செய்து வரும் சுகுமாரியம்மா என்ற மூதாட்டி லாட்டரி சீட்டுக்களை வாங்கினார். கடந்த மே 15 ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் இவர் வாங்கிய டிக்கெட்டிற்கு முதல் பரிசு அடித்தது.

சுகுமாரியம்மாவிடம் இருந்த FG 348822-என்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசுத்தொகை கிடைத்தது. இவர் மொத்தமாக செட் டிக்கெட்டுகளை வாங்கியதால் ஆறுதல் பரிசுத்தொகையும் அவருக்கே அடித்தது. லாட்டரி டிக்கெட்டுக்கு பரிசு விழுந்தது தெரியாமல் இருந்த சுகுமாரியம்மாவிடம், லாட்டரியை விற்பனை செய்த கண்ணன் என்பவர், அவரிடம் நைசாக பேசி பரிசு விழுந்த லாட்டரி சீட்டை ஏமாற்றி வாங்கி சென்றார்.

இதன் பின்னர் இந்த லாட்டரி சீட்டை நான் தான் வாங்கியதாகவும், தனக்கே பரிசு விழுந்ததாகவும் ஊரில் லட்டு கொடுத்து கொண்டாடியிருக்கிறார். அப்போதுதான், கண்ணனிடம் உள்ள லாட்டரி டிக்கெட் சுகுமாரியம்மாவிடம் இருந்து ஏமாற்றி வாங்கி வந்தது என தெரியவந்தது. இந்த விஷயம் தெரிந்ததும் உடனடியாக சுகுமாரியம்மா, லாட்டரி துறையிடம் நடந்த விஷயம் குறித்து புகார் அளித்துள்ளார்.

அதிகாரிகள், காவல்துறையிடம் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதையடுத்து சுகுமாரியம்மா காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், தலைமறைவாக இருந்த கண்ணனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை எப்படியும் விட்டுவிடக்கூடாது என விடாப்பிடியாய் இருந்த சுகுமாரியம்மா, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், சுகுமாரியம்மாவிற்கு சாதகமாக மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, பரிசாக விழுந்த லாட்டரி டிக்கெட்டும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, லாட்டரி டிக்கெட்டை திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரி துறையில் ஒப்படைத்து பரிசுத்தொகையான ஒரு கோடி ரூபாயை பெற்றார். வரிகள் பிடித்தம் போக ரூ.63 லட்சம் சுகுமாரியம்மாவிற்கு கிடைத்துள்ளது.

தன்னிடம் லாட்டரி டிக்கெட்டை ஏமாற்றி வாங்கி சென்ற கண்ணன் மீது கொடுத்த புகாரையும் தற்போது சுகுமாரியம்மா வாபஸ் பெற்றுள்ளாராம். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்களே அதுபோல லாட்டரியில் பரிசாக கிடைத்த தொகையை வாங்க முடியாத நிலை ஏற்பட்டாலும் நீதிமன்றத்தில் போராடி பரிசுத்தொகையை வாங்கிய சுகுமாரியம்மாவை தெய்வம் கைவிடவில்லை என சேட்டன்கள் முனுமுனுக்கிறார்களாம்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+