திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜஸ்ட் ‘மிஸ்’.. கேரளாவில் திக்திக் - நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ! எஸ்கேப் ஆன சிறுவர்கள் - ஆத்தி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்களை விரட்டி வந்த வெறிபிடித்த நாய்களில் நூலிழையில் தப்பிய 2 சிறுவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் நாய்களை மக்கள் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகின்றனர். ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைவராலும் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இது அல்லாமல் செல்லும் இடமெல்லாம் தெருநாய்களும் சூழ்ந்து நிற்கின்றன. பெரும்பாலும் இந்த நாய்களால் ஆபத்து ஏற்படாவிட்டாலும் சில நேரங்கள் அவை வெறிபிடித்து மக்களை கடித்து விடுகின்றன.

29 நாய்களை சரமாரி சுட்டுக் கொன்ற கும்பல்.. கண்ணில் பட்டவர்களை எல்லாம்.. கத்தாரில் பயங்கரம்29 நாய்களை சரமாரி சுட்டுக் கொன்ற கும்பல்.. கண்ணில் பட்டவர்களை எல்லாம்.. கத்தாரில் பயங்கரம்

 நாய் கடிகள்

நாய் கடிகள்

தெருநாய்கள் மட்டுமின்றி வீட்டு நாய்களும் உரிமையாளர்களை கடிக்கும் செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் பிட் புல் வகை நாய்கள் கடித்து உரிமையாளர்கள் உயிர்களையும், உடல் உறுப்புகளையும் இழந்த செய்திகள் சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன.

 கேரளாவில் நாய்கள்

கேரளாவில் நாய்கள்

குறிப்பாக கேரள மாநிலத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து இருப்பதாகவும் இதனை தடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே.பிஜு, "ஆகஸ்ட் மாதம் முதல் மொத்தம் 8 பேர் தெருநாய் கடிதத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

 நீதிபதி கருத்து

நீதிபதி கருத்து

குறிப்பாக தெருநாய்களுக்கு உணவு அளிப்பவர்களே அதற்குப் பொறுப்பு என்றும் அந்த நாய்கள் யாரையாவது தாக்கினால் அதற்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறியது முக்கிய செய்தியாக மாறியது. தெரு நாய்களுக்கு தடுப்பூசிபோட வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார்.

2 சிறுவர்கள்

இந்த நிலையில் நேற்று கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவான ஒரு காட்சி பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க செய்து உள்ளது. அங்குள்ள ஒரு பகுதியில் நடந்து சென்ற 2 சிறுவர்களை 4 முதல் 5 வெறி நாய்கள் கும்பலாக விரட்டின. உடனே இருவரும் அங்குள்ள வீட்டிற்கு புகுந்து கதவை மூடியதால் தப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

English summary
2 Students escaped from 5 stray dogs in Kerala Kannur districts amid Supreme court directed that to take action against dog feeders and they are the only responsible for attack and they should spend the medical allowence for the attacked people
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X