ப்பா என்ன ஸ்டைலு.. அடியோடு மாறிய 60 வயது தினக்கூலி தாத்தாவின் வாழ்க்கை.. ஒரே நாளில் "சூப்பர் மாடல்"!
திருவனந்தபுரம்: கேரளாவில் தினக்கூலி வேலை பார்க்கும் 60 வயது முதியவர் ஒருவர் ஒரே நாளில் அம்மாநிலத்தின் சூப்பர் மாடலாக மாறி உள்ளார்.
Recommended Video
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் மம்மிக்கா. அங்கு கொடிவள்ளி என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.
60 வயது ஆகும் இவர் தினக்கூலி வேலைகளை செய்து வருகிறார். ஊர் கிராமத்தில் இவர் மிகவும் பிரபலம்.

யார் இவர்?
எல்லோரிடமும் சிரித்து பேசும் இவர், எந்த வீட்டில் என்ன கூலி வேலையாக இருந்தாலும் முதல் ஆளாக சென்று செய்பவர். வெள்ளை முடி, சால்ட் அண்ட் பெப்பர் முறுக்கு மீசை மற்றும் தாடி என்று கூல் தோற்றம் கொண்ட இவர் அப்பகுதி இளசுகள் பலருக்கும் நட்பானவர். மம்மிக்கா.. மம்மிக்கா என்று ஊரில் இருக்கும் இளைஞர்கள் இவரை நட்பாக அழைத்து ஜாலியாக உரையாடுவது வழக்கம். இந்த நிலையில்தான் அப்பகுதி போட்டோ கிராபர் இவரின் வாழ்க்கையை மாற்றி உள்ளார்.

ஜாலி டைப்
மிக குறைந்த சம்பளத்திற்கு இவை தினக்கூலி வேலை பார்த்து வந்து இருக்கிறார். இவரின் தோற்றத்தில் ஒரு கெத்து இருந்ததையும், ஒரு பக்க சாயலில் இவர் நடிகர் விநாயகன் போல இருந்ததையும் அப்பகுதி போட்டோ கிராபர் ஷரீக் வாயிலில் கவனித்து இருக்கிறார். அட இந்த தாத்தா செம கெத்தாக இருக்கிறாரே என்று அவரை கூப்பிட்டு மாடல் சூட் எடுக்க முடிவு செய்துள்ளார். முதலில் அந்த தாத்தா இதற்கு மறுத்துள்ளார்.

போட்டோ சூட்
நான் அதற்கெல்லாம் செட்டாக மாட்டேன் என்று மம்மிக்கா கூறியுள்ளார். ஆனால் அதன்பின் அவரிடம் தன்னுடைய போட்டோக்களை காட்டி ஷரீக் வாயிலில் போட்டோ ஷூட்டிற்கு சம்மதிக்க வைத்துள்ளார். கடைசியில் போட்டோ ஷூட்டிற்கு முன்பாக மஜினாஸ், ஆஷிக், ஷகீப் ஆகியோர் சேர்ந்து மம்மிக்காவிற்கு கோட் சூட் போட்டு மேக் அப் போட்டுள்ளனர். அதன்பின் இவர்கள் எடுத்த போட்டோ சூட்தான் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

ஷூட்டிங்
உள்ளூர் நிறுவனம் ஒன்றுக்கு இந்த ஷூட்டிங்கை எடுத்துள்ளனர். இதில் மம்மிக்கா கூலாக கோட் சூட் அணிந்து, கண்ணாடி போட்டு , செம கெத்தாக இருந்துள்ளார். அதோடு கண்ணாடி போட்டுகொண்டு இவர் கார் பக்கம் நிற்பதும், நடப்பதும், கையில் டேப் லேட் வைத்து அதை பார்ப்பதும் வைரலாகி உள்ளது. கேரளாவில் சூப்பர் மாடலாக ஒரே நாள் இரவில் மம்மிக்கா உருவெடுத்து இருக்கிறார்.

செம லுக்
60 வயது ரிட்டையர் ஆன பணக்கார வெளிநாட்டு டான் போன்ற லுக்கில் மம்மிக்கா அசத்தி உள்ளார். அதேபோல் பணக்கார வயதான மாடல் போன்றும் இவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மின்னுகிறார். இவரின் புகைப்படங்களை இணையத்தில் பலர் பகிர்ந்து வருகிறார். மாடலிங் பிடித்து போன மம்மிக்கா தற்போது தனக்கென இன்ஸ்ட்டா பக்கம் ஒன்றையும் தொடங்கி உள்ளார். அதோடு தொடர்ந்து கூலித்தொழில் மற்றும் மாடலிங் இரண்டையும் செய்ய போவதாக மம்மிக்கா கூறியுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications