உன்ன நம்பி வந்தேன் பாரு.. என்ன சொல்லனும்! கூகுள் மேப்பை நம்பி காரை நெல் வயலுக்குள் இறக்கிய ஓட்டுனர்!
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கூகுள் மேப்பை நம்பி சென்ற கார் ஓட்டுனர் நெல் வயலுக்குள் நள்ளிரவில் காரை சிக்க வைத்த சம்பவமும், காலையில் அதனை போராடி மீட்ட சம்பவமும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
உலகளவில் இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மேப் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் வாகன பயணம் மேற்கொள்ளும் மக்கள் தங்கள் செல்லவேண்டிய இடத்திற்கான பகுதியை குறிப்பிட்டால் போதும் கூகுள் மேப் பாதையை துல்லியமாக கணிக்கும். மேலும் எங்கெங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளது எங்கெங்கு வேகமாக செல்லலாம் உள்ளிட்ட வசதிகளையும் கூகுள் மேப் வழங்குகிறது.

கூகுள் மேப் வசதி
அதே நேரத்தில் சில குறைபாடுகளும் கூகுள் மேப்பில் உள்ளது. உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் கூகுள் மேப் வசதியுடன் கார் மற்றும் பிற வாகனங்களை இயக்கியவர்கள் விபத்துக்குள்ளாகி வருவதும் நடைபெற்று வருகிறது. சில நேரங்களில் நடுவழியில் சிக்கித் தவிக்கும் சம்பவங்களும் நடைபெற்றுத்தான் வருகிறது. சில நேரங்களில் உயிர்பலிகளும் நடைபெற்று தான் வருகின்றன.

கேரளாவில் விபத்து
இந்நிலையில் கேரள மாநிலத்தில் கூகுள் மேப்பை நம்பி சென்ற கார் ஓட்டுனர் நெல் வயலுக்குள் நள்ளிரவில் காரை சிக்க வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கேரளா மாநிலம் மலப்புரத்திலுள்ள திரூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் பயணம் சென்று கொண்டிருந்தார். இவர்கள் செல்லும் இடத்திற்கு கூகுள் மேப்ஸைப் பயன்படுத்தி எட்டு கிலோமீட்டர் தூரம் மட்டுமே பயணித்தது.

வயலில் இறங்கிய கார்
ஆனால் கூகுள் மேப் காட்டிய பாதை பாலச்சிராவின் செங்குத்தான பாதை வழியாக சென்றது . அங்கு சாலை முடிந்தது கார் நெல் வயலில் இறங்கியது. முன்னால் இருந்ததெல்லாம் நீர் நிறைந்த வயல்.இரவு நேரம் என்பதால் காரை எடுக்க முடியாததால் காரை அங்கேயே விட்டுவிட்டு சாலைக்கு நடந்து சென்று வேறு வாகனத்தை கொண்டு வந்து பயணத்தை தொடர்ந்தார். மறுநாள் காலை, உள்ளூர் மக்கள் காரை கயிறுகட்டி சிரமப்பட்டு காரை சாலைக்கு கொண்டு வந்தனர்.

அடிக்கடி விபத்து
இதேபோன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன. டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் கேரளாவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாக்கில் விழுந்தனர். இச்சம்பவம் கடந்த மே மாதம் குருபாந்தறையில் நடந்தது. குறப்பந்தரா-கல்லாரா சாலையில் உள்ள குறப்பந்தரா கடவு பள்ளத்தில் கார் கவிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications