அதெல்லாம் முடியாது! ஒரு லட்சம் தர்றோம்.. இளம் நடிகையை மிரட்டி ஆபாச படம்! போலீசுக்கு ஓடிய நடிகர்!
திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆங்கிலத்தில் எழுதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து பெற்று இளம் நடிகர் மற்றும் நடிகையை மிரட்டி ஆபாச வெப் சீரிஸில் நடிக்க வைத்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பெங்களூர் பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளம் நடிகர் ஒருவர் கேரள முதல்வர் விஜயனுக்கும் திருவனந்தபுரம் கமிஷனர் சர்ஜன் குமாருக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் பிரபல ஓடிடி நிறுவனத்தில் வெளியாகவுள்ள வெப் சீரிசில் நாயகனாக நடிக்க ஆட்கள் தேவை என விளம்பரம் வந்ததைத் தொடர்ந்து அதற்கு தான் விண்ணப்பித்ததாகவும், தன்னை நேர்முகத் தேர்வுக்கு அழைத்த நிலையில் திருவனந்தபுரம் அருகே அருவிக்கரை என்ற இடத்தில் ஒரு விடுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது,.

ஆபாச படங்கள்
பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற நிலையில் படப்பிடிப்புக்கு முன்னதாக அந்த இளைஞரிடம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து கேட்டுள்ளனர். முழுமையாக படிக்காமல் அந்த இளைஞனும் கையெழுத்து போட்ட நிலையில் அது ஆபாச படத்தில் நடிப்பதற்கான ஒப்பந்தம் எனவும் படத்தில் நடிக்க மறுத்தால் 5 லட்சம் தர வேண்டும் என மிரட்டியதாக கூறப்படுகிறது.

சிக்கிய இளைஞர்
தனியாக விடுதியில் சிக்கிக் கொண்டதால் வேறு வழியின்றி அந்த இளைஞர் ஆபாச படத்தில் நடித்ததாகவும் தன்னை முழு நிர்வாணமாக நடிக்க வைத்ததோடு அந்த படத்தை ஒரு பெண் இயக்குனரே இயக்கியதாகும் இந்த படம் ஓடிடி தளத்தில் தீபாவளியன்று வெளியாக இருப்பதாக விளம்பரம் வெளியாகி உள்ள நிலையில் தன்னுடைய வீட்டினர் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார்.

பிரபல ஓடிடி தளம்
இதே போல அதே ஓடிடி தளத்திற்கு எதிராக மளப்புறத்தைச் சேர்ந்த இளம் நடிகையும் புகார் கொடுத்து இருக்கிறார். ஒரு சில மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள அவர் திருவனந்தபுரத்துக்குச் சென்று சிலரை சந்தித்துள்ளார். அவர்கள் ஒரு ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள வெப் தொடரில் நாயகியாக நடிக்க வைப்பதாக கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி ஆபாச படத்தில் நடிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

நடிகைக்கும் மிரட்டல்
முதல் இரண்டு நாள் சாதாரண காட்சிகள் எடுத்த நிலையில் இருபதாயிரம் சம்பளம் கொடுத்ததோடு மேலும் ஒரு லட்சம் தருவதாகவும் ஆபாச காட்சிகளில் நடிக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். அவர் மறுத்த நிலையில் ஆபாச படத்தில் நடிக்காவிட்டால் 7 லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டியதால் அவரும் அந்த ஆபாச படத்தில் நடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்து தனது பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் இது குறித்து திருவனந்தபுரம் சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் ஆனால் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது குறித்து முதல்வருக்கு புகார் அளிக்க உள்ளேன் எனக் கூறியிருக்கிறார். கேரளாவில் இளம் நடிகர் நடிகைகளை குறிவைத்து ஆபாச படம் எடுக்கும் கும்பலின் அட்டகாசத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications