பள்ளி மாணவிகள் முன்பு பேண்ட்டை கழற்றி ஆபாச சைகை! 2வது முறையாக அநாகரீகம்.. கும்கி பட நடிகர் கைது!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருச்சூரில் சிறுமிகளின் முன் அநாகரீகமான ஆபாச சைகை மற்றும் ஆபாசமாக நடந்து கொண்டதாக நடிகர் ஸ்ரீஜித் ரவியை திருச்சூர் மேற்கு போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்தனர்.
கேரளா மாநிலம் திருச்சூரிலுள்ள ஆயந்தோல் எஸ்.என்.பார்க் அருகே கடந்த புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் 11 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுமிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் சிறுமிகளின் முன் ஆபாசமாக அவரின் உடையை களைந்து நிர்வாணமாக நின்றுவிட்டு காட்டிவிட்டு கருப்பு நிற காரில் ஏறி சென்றுள்ளார். இது குறித்து சிறுமிகள் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

போலீஸில் புகார்
பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்று காலை அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்த போது அந்த நபர் தமிழ் மற்றும் மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.

நிர்வாண சைகை
அவர் தான்தான் என்றும் நிர்வாண சைகை காண்பித்த குற்றத்தையும் ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்றும் தனக்கு ஒரு நோய் இருப்பதாகவும், மருந்து சாப்பிடாததால் ஏற்பட்ட பிரச்சனை என்றும் ஸ்ரீஜித் ரவி போலீசாரிடம் கூறியுள்ளார்.

2016 இலும் கைது
குழந்தைகளும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுள்ளனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ஸ்ரீஜித் ரவி ஏற்கனவே இதே போன்ற ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். இவர் இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு ஒட்டப்பாலம் பத்திரிபாலவில் 14 பள்ளி மாணவிகள் முன் இதே போன்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

கும்கி
அப்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் கைதாகியுள்ள அவருக்கு தண்டனை கிடைக்குமா என தெரியவில்லை. என்னதான் நோய் இருந்து மருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் இது போல் சைகைளை செய்வதை எப்படி ஏற்க முடியும் என நெட்டிசன்கள் முன் வைக்கிறார்கள். இவர் கும்கி, மத யானை கூட்டம், கதகளி படங்களில் நடித்துள்ளார். இந்த சம்பவம் கேரளா திரைத் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications