திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோயிலுக்குள் நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுப்பு.. சாலையில் இருந்து தரிசனம் செய்ததாக புகார்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்ற நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவரை சாலையிலிருந்தே சாமி தரிசனம் செய்ய வற்புறுத்தியதாகவும் தகவல்கள் எழுந்துள்ளன.

கேரளத்தை சேர்ந்தவர் நடிகை அமலாபால். இவர் மைனா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தலைவா, தெய்வத் திருமகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

முன்னணி நடிகையாக வலம் வந்த போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யை 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் 3 ஆண்டுகளில் விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரிந்துவிட்டனர்.

பாதி வழியில இறங்க முடியாது! செல்பி எடுக்க வந்து.. வந்தே பாரத் ரயிலில் சிக்கிய நபர்! இவ்வளவு ஃபைனா? பாதி வழியில இறங்க முடியாது! செல்பி எடுக்க வந்து.. வந்தே பாரத் ரயிலில் சிக்கிய நபர்! இவ்வளவு ஃபைனா?

ஏ.எல். விஜய்

ஏ.எல். விஜய்

இதன் பிறகு ஏ.எல்.விஜய் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது. விவாகரத்துக்கு பின்னர் துணிச்சலான வேடங்களில் நடித்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு ரத்னகுமார் இயக்கத்தில் ரிலீஸ் ஆன ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

படத்தயாரிப்பு

படத்தயாரிப்பு

அந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் படத்தயாரிப்பில் இறங்க முடிவு செய்த அமலாபால், கடந்த ஆண்டு கடாவர் என்கிற படத்தை தயாரித்து ரிலீஸ் செய்திருந்தார். இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்றது.

மலையாளம் மற்றும் இந்தி மொழி

மலையாளம் மற்றும் இந்தி மொழி

மலையாளம் மற்றும் இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவரது கையில் 4 படங்கள் உள்ளன. இப்படி பிஸியான நிலையில் இவர் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். அண்மையில் இவர் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் நடிகை அமலா பாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரின் பேரில் கடந்த ஆகஸ்ட் ஜெய்ப்பூரை சேர்ந்த ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங்கை விழுப்புரம் போலீஸார் கைது செய்தனர்.

பவ்நிந்தர் சிங்

பவ்நிந்தர் சிங்

ஆனால் விசாரணையில் பவ்நிந்தர் சிங் கூறுகையில், நானும் அமலா பாலும் நட்புடன் இருந்து திரைப்பட நிறுவனத்தை தொடங்கினோம். இதையடுத்து இருவரும் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திரைப்பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் புஷ்கரில் உள்ள ராதிகா பேலஸில் திருமணம் நடந்தது என ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

பவ்நிந்தருக்கு ஜாமீன்

பவ்நிந்தருக்கு ஜாமீன்

இந்த வழக்கில் பவ்நிந்தருக்கு ஜாமீன் கிடைத்தது. இந்த நிலையில் நடிகைஅமலா பாலை கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த திங்கள்கிழமை கேரளல மாநில எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளார் அமலா பால். இந்த கோயிலுக்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அமலாபால் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவரை கோயில் ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படவில்லையாம். கோயிலுக்கு எதிர்புறம் உள்ள சாலையில் இருந்தவாறே தரிசனம் செய்து கொள்ளுமாறு தன்னை வற்புறுத்தியதாக அமலாபால் குற்றம்சாட்டினார்.

மத பாகுபாடு

மத பாகுபாடு

2023 ஆம் ஆண்டில் கூட மத பாகுபாடு நிலவுவதை பார்க்கும் போது வருத்தமாக இருப்பதாகவும் இது போன்ற விஷயங்கில் விரைவில் மாற்றம் வரும் என்றும் நம்புவதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார். மதத்தை காரணம் காட்டி நடிகை அமலா பால் கோயிலுக்குள்அனுமதிக்கப்படாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Actress Amala paul was not allowed in Thiruvairanikkulam temple, Kerala by citing that she is Christian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X