ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. கேரள அரசு அலுவலகங்களில் "பயோமெட்ரிக்".. வருகைப் பதிவு அமல்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களில் 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அரசு ஊழியர்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் இந்த பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையை கேரள அரசு கொண்டு வந்திருக்கிறது.
கேரள அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் ஆழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஊழியர்கள் அலட்சியம்
கேரளாவில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதாகவும், வேலை நேரம் முடியும் முன்பே அலுவலகத்தில் இருந்து சென்றுவிடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதனால் அரசு சேவைகளை பெற வரும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல, அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பணியில் அலட்சியமாக இருப்பதாக கூறப்பட்டது.

பயோமெட்ரிக் - பலத்த எதிர்ப்பு
இதன் தொடர்ச்சியாக, கேரளாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு இயந்திரங்களை பொருத்தும் திட்டத்தை அம்மாநில அரசு கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. ஆனால், இதற்கு அரசு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பயோ மெட்ரிக் பொருத்தப்பட்டால் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் எச்சரித்தனர். இதனால் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் காலத்தாமதம் ஏற்பட்டது.

கேரள அரசு அதிரடி
மேலும், கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், பயோ மெட்ரிக் வருகைப்பதிவு திட்டத்தை கொண்டு வருவதில் சிக்கல் உருவானது. இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக கேரள அரசு அலுவலகங்களில் இன்று அதிரடியாக பயோ மெட்ரிக் வருகைப் பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. முதல்கட்டமாக, கேரளாவில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் துறைசார்ந்த அலுவலகங்களில் பயோமெட்ரிக் வருகைப் பதிவுக்கான கருவிகள் பொருத்தப்பட்டன.

அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி
இன்னும் ஒரு மாதத்திற்குள் கேரளாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் (பள்ளிகள் உட்பட) பயோமெட்ரிக் வருகை பதிவு கருவிகள் பொருத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும், பயோமெட்ரிக் வருகைப்பதிவு குறித்த தகவல்களை தலைமைச் செயலகத்தில் அந்தந்த துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், பணிக்கு தாமதமாகவோ அல்லது பணிநேரம் முடிவதற்குள் ஊழியர்கள் சென்றாலோ அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும். அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் கேரள அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் ஆழ்ந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications