ஆனந்தமாக நடந்துகொண்டிருந்த திருமண விழா.. திடீரென வந்த நபர்.. பறந்த சேர்கள்.. பரபரத்த கேரளா
திருவனந்தபுரம்: கேரளாவில் மகிழ்ச்சியாக நடைபெற்று கொண்டிருந்த திருமண வரவேற்பின் போது திடீரென மணமகள் வீட்டினருடன் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞர் சண்டையிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
கேரளாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற பயங்கர மோதல் சம்பவம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மகிழ்ச்சியாக நடைபெற்று கொண்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த திடீர் மோதலில் சுமார் 30 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மழை வந்ததும் கவிதை பாடினால் கவிஞன்.. அதுவே காயப்போட்ட துணி ஞாபகத்திற்கு வந்தால் குடும்பஸ்தன்!

சேர்களும் டேபிள்களை
இது தொடர்பான வீடியோ பதிவுகளும் இணையத்தில் வேகமாக பரவின. அந்த வீடியோவில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக்கொள்கின்றனர். அங்கு இருந்த சேர்களும் டேபிள்களையும் தூக்கி எறிந்து ஒருவொருக்கொருவர் அடித்துக்கொள்வதை காண முடிகிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களும் வயதானர்களும் இதைக் கண்டு அச்சத்துடன் நிற்கின்றனர்.

30 பேர் காயம்
கடுமையாக நடைபெற்ற மோதலின் இறுதியில் 30 பேர் காயம் அடைந்து இருக்கின்றனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் திருவனந்தபுரம் மெடிக்கல் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் சம்பவம் நடைபெற்றது ஏன் என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. மலையாள மனோராமா வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருமண வரவேற்பு நிகழ்ச்சி
சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்போது வரவேற்பு நிகழ்ச்சியில் வந்திருந்த உறவினர்கள் பலரும் மணக்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்த வண்னம் இருந்து இருக்கின்றனர். அப்போது, மணமகளின் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் அங்கு வந்து இருக்கிறார். ஏற்கனவே மணமகளின் தம்பியை தாக்கியதால் , பக்கத்து வீட்டை சேர்ந்த நபருக்கும் மணமகள் வீட்டினருக்கு பகை இருந்துள்ளது.

பகை காரணமாக
ஆனாலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த பக்கத்து வீட்டுக்காரர் பணத்தை பரிசாக அளித்து இருக்கிறார். ஆனால், ஏற்கனவே, இருந்த பகை காரணமாக மணமகளின் தந்தை வாங்க மறுத்து இருக்கிறார். இதனால், பக்கத்து வீட்டுக்காரருக்கும் மணமகளின் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்கு வாதம் கைகலப்பாக மாறி இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றுள்ளது.

போலீசார் வழக்கு பதிவு
இதில் மணப்பெண்ணின் தந்தை தலை உள்ளிட்ட இடத்தில் காயங்களுடன் கீழே விழுந்து இருக்கிறார். இந்த மோதல் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்டு இருக்கிறது. போலீசார் வந்த பிறகே இந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குள் அழைப்பின்றி வந்து ரகளை செய்த இளைஞர் தப்பி ஓடிவிட்டார். இந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய இளைஞரை தேடி வருகின்றனர்.

பெரும் பரபரப்பு
இந்த திடீர் மோதலால் திருமண வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும்,திட்டமிட்டபடி திருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்து திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.