கொரோனா மரணம்... உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச்சடங்கு செய்ய கேரள அரசு அனுமதி
கேரளாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று வீட்டில் 1 மணிநேரம் அஞ்சலி செலுத்தலாம் என கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.
திருவனந்தபுரம்: கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு கொண்டு வராமல் தகனம் செய்து விடுவதால் குடும்பத்தினரும் உறவினர்களும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதனை போக்கும் வகையில்
கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார். உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து சென்று வீட்டில் 1 மணிநேரம் அஞ்சலி செலுத்தலாம் என தெரிவித்துள்ளார் முதல்வர் பினராயி விஜயன்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுப்பக்கம் கூட செல்லாமல் சுற்றிச் செல்பவர்கள் பலர் இருக்கின்றனர். அக்கம் பக்கத்தில் சாதாரணமாக மரணம் நிகழ்ந்தால் கூட போக முடியாத சூழ்நிலைக்கு தள்ளி விட்டது கொரோனா கொடுந்தொற்று.

கொரோனாவால் மரணமடைந்தவர்களின் உடல்களை வீட்டிற்கு கூட எடுத்து வர முடியாமல் எந்த வித இறுதிச்சடங்கும் செய்ய முடியாமல் தகனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. துக்கத்தில் கூட பங்குபெற முடியாமல் இறந்தவர்களுக்கு எந்த வித மரியாதையும் செலுத்த முடியவில்லையே என்ற மன அழுத்தம் பலருக்கும் ஏற்படுகிறது.
இதனை போக்கும் வகையில் கேரளா அரசு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்துச்சென்று ஒரு மணிநேரம் அஞ்சலி செலுத்தலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.
கேரளாவில் கடந்த 24 மணிநேரத்தில் 13550 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, 104 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல் மருத்துவமனையிலிருந்து நேரடியாக மயானம் எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்து வந்தனர்.
கேரளாவில் தினசரி பாதிப்பு 10ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருகிறது. இது குறித்து மாநில முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பினராயி விஜயன், உயிரிழந்த கொரோனா நோயாளிகளுக்கு அவர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதி மரியாதை செலுத்த முடியாத சூழல் உள்ளதால் அவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரிப்பதாக கூறினார்.
இதனை கருத்தில் கொண்டு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை வீட்டில் 1 மணிநேரம் வைத்து அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்படுவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள அரசின் உத்தரவை அடுத்து இனி கொரோனாவின் உயிரிழந்தவர்களின் உடலை வீட்டிற்கு எடுத்து வந்து ஒரு மணி நேரம் இறுதிச் சடங்குகள் செலுத்திய பின்னர் தகனம் செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டிலும் இது போல அரசு உத்தரவு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications