பயங்கரம்.. 11 முறை கத்தியால் குத்தி கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை.. ஆர்எஸ்எஸ் மீது பாயும் சிபிஎம்.. ஷாக்
11 முறை கத்தியால் குத்தி கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளார்
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியை 11 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.. இதனால் கேரள மாநிலமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவள்ளா தாலுகா பிரிங்கரா பகுதியை சேர்ந்தவர் சந்தீப் குமார்... 34 வயதாகிறது..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.. பிரிங்கரா பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கமிட்டி செயலாளராகவும் செயல்பட்டு வந்தவர்.

கொடூரம்
இந்நிலையில், திருவள்ளாவில் உள்ள சேத்தன்ஹரி பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் சந்தீப் குமார் தனது பைக்கில் சென்றுகொண்டிருந்தார்... அப்போது, அவரை சிலர் பின்னாடியே பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.. சந்தீப் குமாரின் பைக்கை திடீரென மறித்து நின்ற அந்த கும்பல், தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சந்தீப் குமாரை 11 முறை சரமாரியாக குத்தியது.. இதில் சந்தீப்குமார் அலறி துடித்துள்ளார்..

ரத்த வெள்ளம்
அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.. ஆனால், அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது. சந்தீப்குமாரும் ரத்த வெள்ளத்திலேயே அங்கேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சந்தீப்குமாரின் உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

விசாரணை
சந்தீப்குமாரை 5 இளைஞர்கள் கொண்ட கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றதாக அங்கிருந்தோர் தெரிவித்துள்ளனர்... ஆனால் அவர்கள் யார் என்று தெரியவில்லை.. இந்த கொடூர கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கனியம்பரம்பில் ஜிஷூனு, ஸ்ரீஜித் ஆகிய 2 பேருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்..

ஆர்எஸ்எஸ்
எனவே, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளனர்... இவர்கள் 2 பேருமே ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்று சிலர் சொல்கிறார்கள்.. அதேபோல, சந்தீப்குமாரை கொன்றது ஆர்எஸ்எஸ் அமைப்பினர்தான் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது... எனினும் இந்த குற்றச்சாட்டிற்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. சந்தீப்குமார் கொலை விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications