கள்ளக்காதலன் தான் முக்கியம்.. அம்மாவை கொன்று நாடகமாடிய மகள்.. காட்டிக்கொடுத்த தங்கசங்கிலி
திருவனந்தபுரம்: கேரளாவில் கள்ளக்காதலன் மீது கொண்ட அளவுக்கடந்த அன்பால் பெற்ற தாயை கொன்ற மகளை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையை மறைக்க உதவிய கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் தங்க சங்கிலிக்காக கொலை நடந்ததும், அந்த தங்கசங்கிலியை வைத்தே துப்பு துலக்கி போலீசார் இருவரையும் கைது செய்ததும் தெரியவந்துள்ளது.
கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்டம் முண்டூரை சேர்ந்தவர் தங்கமணி. இவருக்கு வயது 75. இவரது மகள் பெயர் சந்தியா. இவருக்கு வயது 45. சந்தியாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. கணவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சந்தியா தனது கணவரை விட்டு பிரிந்து தாய் தங்கமணியுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் தான் கடந்த 23ம் தேதி வீட்டின் பின்பக்கத்தில் தங்கமணி இறந்து கிடந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து தங்கமணியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது அவரது தலையில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. தங்கமணிக்கு வயது 75 என்பதால் அவர் கால்தவறி கீழே விழுந்து இருக்கலாம். இதில் தலையில் அடிப்பட்டு இறந்து இருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். மேலும் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை என்பது உறுதி செய்யப்பட்டது. அதாவது தங்கமணியின் தலை மட்டுமின்றி கழுத்திலும் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் தங்கமணி எப்போதும் தங்க சங்கிலி அணிந்திருப்பார் என்றும், அவரது தங்க சங்கிலி மாயமாகி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.
அதுமட்டுமின்றி தங்கசங்கிலியை பறித்துவிட்டு அவரை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர். இதையடுத்து தங்கமணியின் மகள் சந்தியாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதுதொடர்பாக சந்தியா அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர வைத்தது. இதுபற்றி போலீசார் கூறியதாவது:
சந்தியா, தனது கணவரை பிரிந்து தாய் தங்கமணியுடன் வசித்து வந்தார். இந்த வேளையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் 29 வயது நிரம்பிய நிதின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளைடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் நிதின் பொருளாதார ரீதியாக கஷ்டத்தை எதிர்கொண்டுள்ளார். இதற்கு சந்தியா உதவி செய்ய விரும்பினார். இதையடுத்து நிதினுக்கு உதவி செய்வதற்காக தனது தாய் தங்கமணியிடம் தங்கசங்கிலியை கேட்டுள்ளார். ஆனால் தாய் தங்கமணி தங்கசங்கிலியை கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் தங்கமணி மற்றும் சந்தியா இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கைக்கலப்பாக மாறி உள்ளது. அப்போது சந்தியா, தனது தாயை கீழே தள்ளினார். இதில் கீழே விழுந்த தங்கமணியின் தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இறந்துள்ளார். இதனால் பயந்துபோன சந்தியா சம்பவம் பற்றி தனது காதலன் நிதினிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் கொலையை மறைக்க முடிவு செய்தனர். தங்கமணி வீட்டில் கால்தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு இறந்ததை போல் சித்தரிக்க முடிவு செய்து வீட்டின் பின்பகுதியில் உடலை போட்டு நாடகமாடியது தெரியவந்தது. தற்போது பிரதே பரிசோதனை அறிக்கை காட்டி கொடுத்ததால் சந்தியா மற்றும் கள்ளக்காதலன் நிதின் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
"Make Kerala Great Again.." கேரளாவில் வீதி வீதியாக வாக்கு கேட்கும் டிரம்ப்.. டிரெண்டாகும் வீடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications