Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷபி முகத்தில் அந்த மர்ம புன்னகை.. ஏதோ நடந்திருக்கு.. "தோண்டும்" போலீஸ்.. நரபலியின் திக் திக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் குலுக்கி வரும் நிலையில், போலீஸார் தற்போது கூறும் விஷயங்கள் உச்சக்கட்ட பயத்தை காட்டுவதாக உள்ளது.

"இந்த நரபலி முதல் தடவை நடைபெற்றது அல்ல" என அடித்துக்கூறும் கேரள போலீஸார், இதற்கு முன்பு இந்த மந்திரவாதி கும்பல் பல பெண்களை நரபலி கொடுத்திருக்கும் எனத் தெரிவிக்கின்றனர். குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஏதோ ஒரு பெரிய விஷயத்தை மறைக்க பார்ப்பது தெளிவாக தெரிகிறது என்றும் போலீஸார் தெரிவிக்கின்றன.

எனவே குற்றவாளிகளுக்கு சொந்தமான நிலங்களை தோண்டி பார்க்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சிறப்பு அதிரடிப்படை வந்துக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் மேலும் பல உடல்களையோ அல்லது எலும்புக்கூடுகளையோ நாம் எதிர்பார்க்கலாம் என கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிரவைத்த நரபலி..

அதிரவைத்த நரபலி..

தமிழகத்தைச் சேர்ந்த பத்மா, ரோஸ்லின் ஆகிய இரு பெண்கள் கேரளாவில் காணாமல் போனதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதன் தொடர்ச்சியாக, அவர்களை பல இடங்களில் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவர்கள் பற்றிய எந்த துப்பும் போலீஸாருக்கு கிடைக்காமல் இருந்தது. அந்த சமயத்தில்தான், ரோஸ்லினும், பத்மாவும் மந்திரவாதி ஷபியுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ஏன் இந்தப் பெண்கள், மந்திரவாதியுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து, மந்திரவாதி ஷபி தொடர்பாக போலீஸார் முன்னெடுத்த விசாரணையின் போது தான் நாட்டையே உறைய வைத்த நரபலி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

பிணம் தின்னும் பூதம்..

பிணம் தின்னும் பூதம்..

எர்ணாகுளத்தைச் சேர்ந்த பகவல் சிங் - லைலா தம்பதியினர் செல்வந்தர்களாக வேண்டும் என்பதற்காக அப்பாவி தமிழ் பெண்கள் பத்மாவையும், ரோஸ்லினையும் மந்திரவாதி ஷபி, நரபலி கொடுத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, மந்திராவ பகவல் சிங், லைலா, ஷபி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்தான் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியது. அதாவது, இரண்டு பெண்களையும் நரபலி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் மாமிசங்களையும் அவர்கள் சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.

மர்மப் புன்னகை - அச்சத்தில் உறைந்த போலீஸார்

மர்மப் புன்னகை - அச்சத்தில் உறைந்த போலீஸார்

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் மிகவும் அழுத்தமாக இருப்பதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். வெளிச்சத்துககு வந்த ரோஸ்லின் - பத்மா நரபலி சம்பவம் குறித்து மட்டுமே அவர்கள் பேசுவதாக தெரிவிக்கும் போலீஸார், அவர்கள் ஏதோ பெரிய விஷயத்தை மறைப்பதாக அடித்துக் கூறுகின்றனர். குறிப்பாக, இதுபோல் வேறு யாரையாவது நரபலி கொடுத்தீர்களா என்ற கேள்வியை கேட்கும் போது பகவல் சிங் - லைலா தம்பதி முகத்தில் ஒருவித பதற்றமும், மந்திரவாதி ஷபியிடம் ஒரு அமானுஷ்யம் கலந்த மர்மப் புன்னகை வெளிப்படுவதாக போலீஸார் கூறுகின்றனர். எனவே இதற்கு முன்பாக நிச்சயம் அவர்களை மேலும் சிலரை நரபலி கொடுத்திருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தோண்ட தயாராகும் அதிரடிப்படை

தோண்ட தயாராகும் அதிரடிப்படை

குற்றவாளிகள் உண்மையை சொல்லாவிட்டாலும், அவர்களின் உடல் மொழியை வைத்து அவர்கள் தவறு செய்தார்களா என்பதை போலீஸார் கண்டுபிடித்து விடுவர். அதன்படி, இந்த மூவரிடமும் விசாரணை நடத்திய அனைத்து போலீஸ் அதிகாரிகளும் கூறிய ஒரு பொதுவான விஷயம். அவர்கள் எதையோ மறைக்கின்றனர் என்பதுதான். எனவே, மந்திரவாதி ஷபியின் கொச்சி வீடு, அவரது ஹோட்டல் உள்ளிட்ட இடங்களை தோண்டி பார்க்க கேரள போலீஸார் முடிவு செய்தனர். இந்தப் பணிக்காக சிறப்பு அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், மோப்ப நாய்களும் கொண்டு வரப்படுவதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த இடங்களை தோண்டும் போது பல மர்மங்கள் வெளியாகும் என பெயர் வெளியிட விரும்பாத காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காணாமல் போனவர்கள் பட்டியல் தயார்

காணாமல் போனவர்கள் பட்டியல் தயார்

அதேபோல, மந்திரவாதி ஷபி கடந்த இரண்டு ஆண்டுகளாக கேரளாவின் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, பலரை அவர் கடத்தி வந்து நரபலி கொடுத்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனை முன்னிட்டு, கேரளாவில் கடந்த இரண்டு வருடங்களில் காணாமல் போன பெண்கள் பட்டியலை போலீஸார் சேகரித்து வருகின்றனர். இதை பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. நரபலி விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+