வாளை ஏந்திக் கொண்டு அணிவகுத்த வி.ஹெச்.பி பெண்கள்! ஜாமீனில் வரமுடியாத பிரிவில் கேஸ் போட்ட கேரள போலீஸ்
திருவனந்தபுரம்: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (விஎச்பி) மகளிர் பிரிவான துர்கா வாஹினியை சேர்ந்த 250 பேர் மீது ஆரியங்கோடு போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வாள்கள் ஏந்தி ஊர்வலம் சென்ற நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார்.
இங்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் பிரிவாக துர்கா வாஹினி உள்ளது. இவர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.

பயிற்சி வழங்க முடிவு
இந்நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே கட்டக்கடை பகுதியில் உள்ள ஆரியங்கோடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கீழரூரில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் துர்கா வாஹினியில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் முறைப்படி போலீசாரிடம் அனுமதி கோரினர்.

வாள் ஊர்வலம் சென்ற பெண்கள்
போலீசார் பயிற்சி நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தனர். இதையடுத்து மே 22ல் பயிற்சி நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் தான் இணையதளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவியது. அதாவது துர்கா வாஹினி அமைப்பை சேர்ந்த சிறுமிகள், பெண்கள் என ஏராளமானவர்கள் கைகளில் வாள்கள் ஏந்தி ஊர்வலமாக போனது தெரியவந்தது.

வீடியோவால் சர்ச்சை
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் போலீசாரிடம் அனுமதி இன்றி துர்கா வாஹினி சார்பில் வாள் ஏந்தி ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. ஏற்கனவே ஆலப்புழாவில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கோஷங்கள் எழுப்பப்பட்டதால் இது போலீசாருக்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதையடுத்து துர்கா வாஹினி அமைப்பை சேர்ந்த 250 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு
இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛சட்டவிரோதமாக கூடியது, ஆயுதம் பயன்படுத்துதல் உள்பட ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார். மேலும் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் நிகழ்ச்சி ஏற்படாட்டாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications