திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரபரப்பாகும் தங்க கடத்தல் விவகாரம்... ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோ... உண்மை என்ன?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா தங்க கடத்தல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனின் மத்தியஸ்தர் என்று கூறப்படும் ஷாஜ் கிரணுடன் நடத்திய உரையாடல் ஆடியோவை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    Pinarayi Vijayan Flight சம்பவம் | Congress Protest In Flight | #India

    விருதுநகர் அருகே இரட்டை கொலை... தொடரும் பதற்றம்! உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை விருதுநகர் அருகே இரட்டை கொலை... தொடரும் பதற்றம்! உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை

    இந்தியாவையே உலுக்கிய கேரளா தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ், தங்க கடத்தலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். இந்த வழக்கில் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன், முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கை தேசிய பாதுகாப்பு முகமை, சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

    ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

    ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்

    இந்நிலையில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய் கிழமை வாக்குமூலம் அளித்தார். அதில், தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, மகள் வீணா, முதலமைச்சரின் செயலாளர் ரவீந்திரன், அப்போதைய தலைமைச் செயலாளர் நளினி நேட்டோ, அப்போதைய அமைச்சர் ஜலீல் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி இருந்தார்.

    பினராயி விஜயன் மறுப்பு

    பினராயி விஜயன் மறுப்பு

    ஸ்வப்னா சுரேஷின் இந்த குற்றச்சாட்டை முதலமைச்சர் பினராயி விஜயன் மறுத்தார். இது குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டார்கள். இதுபோன்ற பொய்களை கூறுவதன் மூலம் அரசு மற்றும் ஆட்சியாளர்களின் உறுதியை குலைக்க சதி நடப்பதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

    ஆடியோ வெளியீடு

    ஆடியோ வெளியீடு

    ஸ்வப்னா சுரேஷின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி கேரள எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஸ்வப்னா சுரேஷ் பாலக்காட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஒரு உரையாடலை வெளியிடுகிறேன் என்று தெரிவித்தார்.

    ஆடியோவில் என்ன?

    ஆடியோவில் என்ன?

    அந்த ஆடியோவில் பினராயி விஜயனுக்கு நெருக்கமானவர் என்ற கூறப்படும் ஷாஜ் கிரண், ஸ்வப்னா சுரேஷுடன் பேசுவது போல் உள்ளது. அதில், நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளித்தது ஏன்? தங்க கடத்தலில் முதலமைச்சர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு தொடா்புள்ளது என்ற குற்றச்சாட்டை பினராயி விஜயன் சகித்துக்கொள்ள மாட்டாா். எனவே, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்வப்னா சுரேஷிடம் ஷாஜ் கிரண் பேசுவது பதிவாகியுள்ளது.

    ஆடியோவில் பிரச்னை?

    ஆடியோவில் பிரச்னை?

    துதொடர்பாக ஷாஜ் கிரண் கூறுகையில், ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டுள்ள ஆடியோவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. உண்மையான ஆடியோவை நான் வெளியிடுவேன். அந்த உரையாடலின் முழுமையான ஆடியோ பதிவைக் கேட்டால் மட்டுமே உண்மை புலப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Swapna Suresh Releases an important audio with Shaj Karan, who is a Mediator of Pinarayi Vijayan. Also Shaj Karan Reacts, that was a false information. He said, Original audio will be Released on Saturday evening.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X