ஒரே மோதிரத்தில்.. இத்தனை ஆயிரம் வைரங்களா? கேரளாவில் உருவாக்கப்பட்ட "காஸ்ட்லி ரிங்".. விலை தெரியுமா?
திருவனந்தபுரம்: தினம் தினம் புதிது புதிதாக உலக சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பல ஆயிரம் வைரங்கள் பொருந்திய மோதிரத்தை உருவாக்கி கேரளாவை சேர்ந்த நகைக்கடை ஒன்று சாதனை படைத்துள்ளது. ஆமாங்க ஒன்னு, ரெண்டு இல்ல மொத்தமா பல்லாயிரம் வைரங்கள் அதுவும் ஒரே மோதிரத்துல. தற்போது இந்த மோதிரம்தான் பரவலாக தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது.
சிறிய அளவு தங்கம் கொண்டு சிறப்பங்களை செய்து சாதனை படைத்தது குறித்த செய்திகளை அவ்வப்போது நாம் கேள்விபட்டு வருகிறோம். ஆனால் வைரம் கொண்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

கேரளா
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் இயங்கி வருகிறது SWA டயமண்ட்ஸ். இது இந்தியாவில் உள்ள வைர நகைக்கடைகளில் முன்னணியானதாகும். இந்த நிறுவனம்தான் கின்னஸ் சாதனையை வென்றுள்ளது.90 நாட்கள் உழைத்து சுமார் 24,679 வைரங்களை கொண்டு ஒரு மோதிரத்தை நிறுவனம் உருவாக்கியுள்ளது. மோதிரத்தின் பெயர் 'தி டச் ஆஃப் அமி'. இதற்கு முன்னதாக 12,638 வைரங்களை கொண்ட மோதிரம்தான் அதிக வைரங்களை கொண்ட மோதிரமாக அறியப்பட்டு வந்தது.

சாதனை
இந்நிலையில் இந்த சாதனையை 'தி டச் ஆஃப் அமி' முறியடித்துள்ளது. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைனில் முதுகலை பட்டம் பெற்ற ரிஜிஷா என்பவர்தான் இந்த மோதிரத்தை வடிவமைத்துள்ளார். தற்போது இந்த மோதிரம் உலகில் அதிகம் வைரம் பொருத்தப்பட்ட மோதிரம் என்கிற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. அதேபோல ஆசிய அளவிலும் விருதுகளை குவித்துள்ளது. பொதுவாக வைரம் தொடர்பான தொழில்களில் பெல்ஜியம் நாடுதான் எப்போதும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

உலக சாதனை
ஆனால் இம்மாதிரியா உலக சாதனைகள் இந்தியா படைத்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மட்டுமல்லாது இந்நிறுவனம் இந்தியாவின் முன்னணி வைரம் தயாரிப்பு நிறுவனமாக இருந்தாலும் இவர்கள் அதிக அளவில் வைரங்களை தயாரிப்பதில்லை. இவர்களுக்கு என குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

SWA டயமண்ட்ஸ்
இந்நிலையில் கேரளாவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 'தி டச் ஆஃப் அமி' மோதிரம் வைர தொழில்முனைவோர்களின் வெற்றியை காட்டுகிறது என்கிறார் SWA டயமண்ட்ஸ் நிறுவனர் அப்துல் கஃபூர் அனாதியான். கடந்த 2019ல் உருவாக்கப்பட இந்த SWA டயமண்ட்ஸ் ஒரு துணை நிறுவனமாகும். கேப்ஸ்டோன் எனும் நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வைரம்-பிளாட்டினம் தொழில்களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கிளைதான் SWA டயமண்ட்ஸ்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications