கேரளாவில் பரவும் கொடிய நோரோ வைரஸ்.. பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு.. அறிகுறிகள் என்ன தெரியுமா?
திருவனந்தபுரம்: கேரளாவில் கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் நோரோ வைரஸ் பாதிப்பு பள்ளி மாணவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இரப்பையில் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த வைரஸ் பாதிப்பு கொச்சி அருகே உள்ள கக்கநாட் பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5 வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காக்கநாட்டில் படித்து வரும் மாணவர்கள் சிலருக்கு திடீரென வாந்தி, பேதி ஏற்பட்டது.
சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்கள் சிலருக்கும் நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

2 மாணவர்களுக்கு நோய் தொற்று
பள்ளியில் நோரோ வைரஸ் பாதிப்பு அறிகுறி காணப்பட்ட 62 மாணவர்களின் ரத்த மாதிரிகளை சுகாதாரத்துறையினர் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். இதில் ஒன்றாம் வகுப்பு மற்றும் 2 ஆம் வகுப்பு பயிலும் 2 மாணவர்களுக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நேரடி வகுப்புகள் ரத்து
மாணவர்களின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் பெற்றோரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோரோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் நோரோ வைரஸ் உணவு மற்றும் தண்ணீர் வழியாக பரவக்கூடியது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடுமையான பாதிப்பை ஏற்படுத்துமா?
போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர். அதேபோல், மக்கள் தூய்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள். நோரோ வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோய் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் வழியாக பரவக்கூடியது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இரப்பை அழற்சியை ஏற்படுத்தும் இந்த வைரஸ் பதிப்பு ஏற்பட்டால் வயிற்று போக்கு மற்றும் வாந்தி போன்றவை ஏற்படும்.

அறிகுறிகள் என்ன?
அதேபோல், கடுமையான தலைவலி, உடல் வலி போன்றவையும் ஏற்படும். நோரோ வைரஸ் பாதித்த 12 முதல் 48 மணி நேரத்தில் அதன் அறிகுறிகள் வெளிப்படும். இந்த வைரஸ் பாதிப்பு பெரும்பாலும் 1 முதல் 3 நாட்களில் குணம் ஆகிவிடும். கேரளாவில் கடந்த ஆண்டும் விழிஞ்சம் மற்றும் திருவனந்தபுரத்தில் இரண்டு பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது மீண்டும் நோரோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதால் சுகதாரத்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது.

நோரோ வைரஸ் பாதிப்பு என்ன
சிறுவர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள், முதியவர்களுக்கு நோரோ வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு வழியாக இந்த வைரஸ் பரவும். அதேபோல், பாதிக்கப்பட்ட நபரிடம் நேரடியாக தொடர்பில் இருந்தாலும் இந்த வைரஸ் பரவக்கூடும். பாதிக்கப்பட்ட நபரின் வாந்தி மற்றும் மலம் வழியாக பிறருக்கு இந்த வைரஸ் பரவலாம். பாதிப்பு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற்று வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். அதிப்படியான குடிநீர் அருந்த வேண்டும். பாதிக்கப்பட்ட நபர்கள் நோய் பாதிப்பில் இருந்து மீண்டும் இரண்டு நாட்கள் கழித்தே வெளியில் செல்ல வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications