ஷாக்! காருக்குள் சிதைக்கப்பட்ட நடிகை! வீடியோவை பார்த்து ரசித்து டெலிட்! வசமாய் சிக்கிய பிரபல நடிகர்
திருவனந்தபுரம் : கேரளாவில் பிரபல நடிகையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து எடுத்த வீடியோ காட்சிகள் நடிகர் திலீப் வசம் இருந்ததாக இயக்குனர் பாலச்சந்திர குமார் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கேரள குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ள நிலையில் வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த சம்பவம் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட உலகை மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது

பாலியல் வன்கொடுமை
இதனையடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி உட்பட 6 பேர் கைதாகினர். மேலும் நடிகைக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்கப்பட்டபோது உடந்தையாக இருந்ததாக நடிகையின் கார் ஓட்டுநர் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பாதிக்கப்பட்ட நடிகை கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் அடையாளம் காட்டினார். இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது . இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

மலையாள நடிகர் திலிப்
பின்னர் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்று அவர் விடுதலையான நிலையில் இந்த வழக்கு விசாரணை கொச்சியில் பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பை கிளப்பினார் மலையாள இயக்குனரான பாலச்சந்திரன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மலையாள இயக்குனரான பாலச்சந்திரன், நடிகையை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சிகளை குற்றவாளிகள் செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் அந்த காட்சிகளை மலையாள நடிகர் திலிப் உள்ளிட்ட அவருக்கு நெருக்கமான சிலர் பார்த்ததாக கூறியிருந்தார்.

முக்கிய ஆதாரம்
மேலும் இந்த வீடியோ முக்கிய பிரபலங்கள் பலருக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் யார் யார் என்று எனக்கு தெரியும் என அவர் கூறியிருந்தார். இதுதொடர்பாக மீண்டும் விசாரணை தீவிரமடைந்த நிலையில், நடிகையை பலாத்காரம் செய்த காட்சிகள் நடிகர் திலீப் வசம் இருப்பதாக இயக்குனர் பாலச்சந்திர குமார் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கேரள குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பையில் உள்ள தடயவியல் ஆலோசனை நிறுவனமான லேப் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து மீட்கப்பட்ட ஹார்ட் டிஸ்கில் இருந்து இந்தத் தகவல் பெறப்பட்டுள்ளது.

மொபைல் போன்கள் ஆய்வு
நடிகர் திலீப் தனது மொபைல் போன்களை ஆய்வுக்கு அனுப்பியதாக கூறிய நிலையில் அதிலிருந்த தரவுகளை அழித்துள்ளார். இந்நிலையில் திலீப் மற்றும் அவரது மைத்துனர் சூரஜ் ஆகியோர் பயன்படுத்திய போன்களில் இருந்து வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. நடிகர் திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 6 போன்களில் இருந்து ஆயிரக்கணக்கான பதிவுகள் மீட்கப்பட்டுள்ளன. ஃபோன் உரையாடல்கள் மட்டும் 200 மணிநேரத்திற்கு மேல் இருக்கும். ஆறு போன்களில், இரண்டின் ஆய்வு கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டது.

வலுக்கும் சிக்கல்
மற்ற போன்கள் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. திலீப் மற்றும் அவரது வக்கீல்கள் சாட்சியங்களை சிதைக்க முயற்சி செய்ததாக கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடிகை தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி, திலீப் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்றதையும் ஊர்ஜிதம் செய்வதற்கான ஆதாரம் உள்ளது. கொலைச் சதி வழக்கு தொடர்பாக இயக்குநர் பாலச்சந்திர குமார் சமர்ப்பித்த குரல் குறிப்புகளும் குற்றப் பிரிவில் உள்ளது. திலீப்பின் போனில் நீதிமன்ற ஆவணங்களின் புகைப்படங்களும் சிக்கியுள்ளன. மேலும் திலீப்பின் மனைவி காவ்யா சென்னையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் வந்தவுடன் அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications