ச்சை! டியூஷனுக்கு வந்த 16 வயது மாணவன்.. மது கொடுத்து பலாத்காரம் செய்த ஆசிரியை.. கேரளாவில் அதிர்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவில் தன்னிடம் டியூஷனுக்கு வந்த 16 வயது மாணவனை மது ஊற்றிக் கொடுத்த பல முறை பலாத்காரம் செய்த காமவெறி பிடித்த ஆசிரியை ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்ச்சியாக இந்த சித்ரவதையை அனுபவித்ததால், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அந்த மாணவனுக்கு தற்போது கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் புகட்ட வேண்டிய ஆசிரியையே, மாணவனிடம் தரம் தாழ்ந்து நடந்து கொண்ட சம்பவம் கேரளா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொச்சையாகும் ஆசிரியர் - மாணவர் உறவு
சமீபகாலமாக உலகில் நடைபெறும் சில சம்பவங்களை பார்க்கும் போது, கலியுகம் நெருங்கிவிட்டதாக பெரியவர்கள் கூறுவது உண்மைதானோ என தோன்றுகிறது. கற்பனையிலும் நினைத்துப் பார்த்திராத காம களியாட்டங்கலும், அநியாயங்களும் தற்போது கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. பள்ளி மாணவனுடன் ஓடிய ஆசிரியை, பள்ளி மாணவியை கற்பழித்த ஆசிரியர் என வெளியாகும் செய்திகள் ஈரக்குலையையே நடுங்க வைக்கின்றன. ஒருகாலத்தில் புனிதமாக போற்றப்பட்ட ஆசிரியர் - மாணவர்கள் உறவு, இன்று பல மடங்கு கொச்சைப்படுத்தப்பட்டு விட்டது. அப்படியொரு வெட்கக்கேடான சம்பவம்தான் கேரளாவில் நடைபெற்றுள்ளது. சமூக அக்கறையின் பேரிலும், மாணவன் நலன் கருதியும் இந்த சம்வபத்தில் தொடர்புடையவர்களின் உண்மை பெயர்களை நாங்கள் வெளியிடவில்லை.

டியூசன் ஆசிரியை
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விமலா (34). பெயர் மாற்றப்பட்டுள்ளது. கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், அதே பகுதியில் டியூஷன் எடுத்து வருகிறார். மேலும், அந்தப் பகுதியில் உள்ள ஜிம்களில் பயிற்சியாளராகவும் இவர் வேலை செய்து வந்தார். இதனிடையே, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதால் இவரது டியூசன் மையத்துக்கு அதிக அளவில் மாணவர்கள் சேர்ந்தனர்.

மாணவன் மீது ஒருவித ஈர்ப்பு..
இந்நிலையில், தன்னிடம் டியூசனுக்கு சேர்ந்த மாணவர்களில் 16 வயது சிறுவன் மீது ஆசிரியை விமலாவுக்கு இனம்புரியாத ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மற்ற மாணவர்களை காட்டிலும் அவனுக்கு கூடுதல் சலுகைகளை ஆசிரியை வழங்கினார். எப்போது வேண்டுமானாலும் டியூசனுக்கு வரலாம்; ஆசிரியை வீட்டுக்குள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என பல சலுகைகள் அந்த மாணவனுக்கு வழங்கப்பட்டது. முதலில், தன் மீது ஆசிரியைக்கு அளவு கடந்த அன்பு உள்ளது என நினைத்த மாணவனுக்கு போக போக தான் அந்த ஆசிரியையின் சுயரூபம் தெரியவந்தது. உடலில் பல இடங்களில் தொடுவது, சீண்டுவது என ஆசிரியையின் சேஷ்டைகளை அந்த மாணவன் உணரத் தொடங்கினான். ஆனால், இதுகுறித்து வீட்டில் சொல்ல பயமாக இருந்ததால் அவன் யாரிடமும் இதை தெரிவிக்கவில்லை.

மது ஊற்றிக் கொடுத்து..
இதனை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட அந்த ஆசிரியை, மாணவனுக்கு பாலியல் தொந்தரவுகளை தரத் தொடங்கினார். ஆனால் மாணவன் எதற்கும் மசியாததால், ஒருகட்டத்தில் அவனுக்கு மது ஊற்றிக் கொடுத்த ஆசிரியை, மாணவன் தன்னிலை மறந்ததும் அவனை பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார். இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு அந்த மாணவனை ஆசிரியை விமலா பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த சூழலில், கடந்த சில நாட்களாக அந்த மாணவன் மிக சோர்வாகவும், யாருடனும் பேசாமலும் இருந்து வந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, அவரது ஆசிரியர்கள் அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்துள்ளனர். அப்போது, தனக்கு நேர்ந்த கொடுமையை ஆசிரியர்களிடம் அவன் தெரிவித்தான்.

கைது - போக்சோ..
இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இதுகுறித்து மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர். தொடர்ந்து, அவனது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், ஆசிரியை விமலாவிடம் விசாரணை நடத்தினர். இதில், மாணவனை பலாத்காரம் செய்ததை விமலா ஒப்புக்கொண்டதை அடுத்து போலீஸார் அவரை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications