இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ! சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்! ‘அம்மா’வில் இருந்து விலகல்!
திருவனந்தபுரம் : மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீதுஅடுத்தடுத்து இரு நடிகைகள் பாலியல் புகார் அளித்துள்ள நிலையில், மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் இருந்து அவர் விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ளார்.
1983 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சூர்யன் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜய் பாபு, படங்களைத் தயாரித்து நடித்து மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தார்.
இந்நிலையில் அவரது தயாரிப்பு நிறுவனத்தில் தாயாரிக்கப்பட்ட படத்தில் நடத்த நடிகை ஒருவர் அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நடிகர் மீது புகார்
கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி கொச்சி போலீசில் நடிகை ஒருவர் தாயாரிப்பாளர் விஜய் பாபு மீது புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த ஒன்றரை மாதங்களாக விஜய் பாபுவால் தான் உடல் ரீதியான தாக்குதல் மற்றும் பாலியல் தொந்தரவுகளை அனுபவித்ததாக கூறியிருந்தார். மேலும் கற்பழிப்பு மற்றும் உடல் ரீதியான தாக்குதல் தவிர அவர் மது மற்றும் போதைப்பொருளை உட்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார் என்றும் அந்த நடிகை கடுமையாக குற்றம் சாட்டினார்.

மலையாள திரையுலகில் அதிர்ச்சி
இது குறித்து பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு தான் குற்றமற்றவர் எனவும் வேண்டுமென்றே தன் மீது அந்த நடிகை பலாத்கார புகார் அளித்துள்ளார் என்றார். அப்போது அந்த நடிகை பெயரையும் விஜய்பாபு தெரிவித்த நிலையில், பாலியல் புகாரோடு சேர்த்து பாதிக்கப்பட்ட நடிகையின் பெயர் மற்றும் அடையாளத்தை வெளியிட்டதாக அவர் மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் விஜய் பாபு மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்தார்.

நடிகர் கைது?
அந்த புகாரில் நடிகர் விஜய் பாபு தன்னிடம் அத்து மீறி நடந்து கொள்ள முயற்சி செய்ததாகவும் தனக்கு ஒரு முத்தம் தருமாறு அவர் வற்புறுத்தியதாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் மேலும் ஒரு பாலியல் குற்றச்சாட்டு விஜய் பாபு மீது பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் சட்ட ரீதியாக வழக்குகளை சந்திப்பேன் என விஜய்பாபு கூறியிருந்த நிலையில் அவரை கைது செய்யும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

அம்மாவில் இருந்து விலகல்
இந்நிலையில் மலையாள திரையுலக நடிகர் சங்கமான 'அம்மா' செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக நடிகர் விஜய் பாபு கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த அமைப்புக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகள் காரணமாக தான் பொறுப்பு வகிக்கும் சங்கத்துக்கு களங்கம் ஏற்படுத்த விரும்பவில்லை எனவும், தான் நிரபராதி என்றும், விரைவில் தெரியவரும் என கூறியுள்ளார். செயற்குழுவில் இருந்து அதுவரை விலகி இருக்கப் போவதாகவும் விஜய் பாபு கூறியுள்ளார் . இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஆனாலும் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் , இருந்தும் தான் பயப்படவில்லை எனக் கூறியுள்ளார்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications