திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2ஆவது முறை பினராயி முதல்வராகும் போது?.. சைலஜா ஏன் மீண்டும் அமைச்சராகக் கூடாது? நெட்டிசன்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தேர்தலில் வாய்ப்பு கொடுப்பதுதான் பெண்கள் உரிமையா? அவர்களின் திறமைகளை அங்கீகரிப்பதுதானே உண்மையான அதிகாரம், உரிமை என சைலஜா டீச்சருக்கு ஆதரவாக மக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

கேரளாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இடதுசாரிகள் கட்சி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதல்வராக பினராயி விஜயன் இன்று பதவியேற்கிறார். இந்த நிலையில் அமைச்சரவை பட்டியலில் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா டீச்சரின் பெயர் இல்லாதது மாநிலத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சமூகவலைதளங்களில் விவாதமே நடக்கிறது. இதுகுறித்து சில ட்வீட்டுகள் வாசகர்களின் பார்வைக்கு:

போற்றும் மக்கள்

சைலஜா டீச்சரை மக்கள் போற்றுகிறார்கள் என்பதற்காகவே அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. இது போல் ஒரு பெண் தலைவர் மக்களால் பாராட்டப்படுபவராக இருந்தால் அவர் முதல்வராவார். எனவே அவரை வளரவிடாமல் தடுக்கவே இந்த முயற்சி. அன்று கவுரி அம்மாள், இன்று சைலஜா டீச்சர்.

தகுதியானவர்

அமைச்சரவையில் இருக்க தகுதியானவர் சைலஜா டீச்சர். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். இவர் அமைச்சரவையில் இல்லாதது அதிர்ச்சியாக இருக்கிறது. முதல்வருக்கு 2ஆவது முறை வாய்ப்பு கிடைக்கும் போது சைலஜா டீச்சருக்கு ஏன் கொடுக்க கூடாது? எங்களுக்கு டீச்சர் வேண்டும்.

சைலஜா டீச்சர்

புதிய கேரளா அரசில் முதல்வருடன் சைலஜா டீச்சரையும் கொண்டு சீதாராம் யெச்சூர் அவர்களே உங்களால் ஏதாவது செய்ய முடியுமா? அவர் சுகாதாரத் துறை அமைச்சராக எங்களுக்கு கிடைக்க கேரள பெண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பெண் உரிமை என்பது வெறுமனே பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பது அல்ல, அவரது திறமைகளை அங்கீகரிப்பதும் சரிதான்.

நேரம்

எதிர்ப்பை தெரிவிக்க நேரம் வந்துவிட்டது. ஒரு வேட்பாளரை மக்கள் தேர்வு செய்து சட்டசபைக்கு அனுப்ப உரிமை உள்ளது என்றால் யார் அமைச்சரவையில் இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்ய மக்களுக்கு உரிமை உள்ளது. இல்லாவிட்டால் மருந்தாளுனரிடம் ஸ்டெதஸ்கோப் கொடுத்தது போல் இருக்கும்.

நிர்வாகம்

பினராயி விஜயன் அவர்களே நிர்வாகத்தில் மாற்றம் வேண்டும் என நீங்கள் உண்மையில் விரும்பினால் பதவியை ராஜினாமா செய்து விட்டு சைலஜா டீச்சரை முதல்வராக்குங்கள்.

English summary
Netisans shared their comments for dropping Shailaja teacher from State cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X