கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்த மக்கள்.. பிரதமர் மோடி இரங்கல்
திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிலர் உயிரிழந்த நிலையில் அதற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
Recommended Video
கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. அங்கு குறைந்தபட்சம் 12 பேரைக் காணவில்லை என்று தெரிய வருகிறது. இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கவே வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த வீடுகள், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணிகளை ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படைகள் செய்து வருகின்றன.

பினராயி விஜயன்
அங்குள்ள மழை வெள்ள நிலவரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோதி பேசினார். இது தொடர்பான தகவலை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதாவது :

பிரதமர் மோடி
"கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரி குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம் பேசினேன். அவர் அங்குள்ள நிலைமையை விவாதித்தார். காயமடைந்தவர்கள் மற்றும் துயரமடைந்தவர்களுக்கு உதவ மத்திய அரசு தயாராக உள்ளது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் பிரார்த்திக்கிறேன். கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் ஒரு சிலர் பலியானது துரதிருஷ்டவசமானது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறினார்.

மேகவெடிப்பு
அரபிக் கடலில் நேற்று ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத்துக்குப் பிறகு இரண்டு அல்லது மூன்று மேக வெடிப்புகள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மழை வெள்ளம் தீவிரம் அடைந்தது.. இங்கு தீவிரம் அடைந்துள்ள மழைப்பொழிவு அசாதாரணது. ஏனெனில் தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவதற்கும் வடமேற்கு பருவமழை தொடங்குவதற்கும் இடையே ஏற்பட்டது தான் காரணம். தொடர்ந்து கனமழை பெய்து வந்த காரணத்தால மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன.

ராணுவம் தயார்
கோட்டயம் மாவட்டத்தின் கூட்டிகால் என்ற இடத்தில் ஏற்பட்ட மோசமான வெள்ள பாதிப்பில் பலர் மாட்டிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்க கூட்டிக்காலில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள காவள்ளி என்ற இடத்தில் ராணுவத்தின் மெட்ராஸ் ரெஜிமென்ட் மீட்புப் பணிகளைத் தொடங்கி உள்ளது. ஞாயிறு காலை முதல் மழை கொஞ்சம் விட்டிருப்பதால் மீட்புப் பணிகள் கொஞ்சம் வேகமெடுத்துள்ளன. தமிழ்நாட்டின் சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிக்கு சென்றுள்ளன. இதேபோல் திருவனந்தபுரத்தில் இருந்தும் ஹெலிகாப்டர்கள் மீட்பு பணியில் இறங்கி உள்ளன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications