திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லட்சத்தீவை காப்பாற்றுங்கள்.. பாஜக நிர்வாகிக்கு எதிராக.. மொத்தமாக திரண்டு நிற்கும் கேரளா.. போராட்டம்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: லட்சத்தீவை காப்பாற்றுங்கள்.. அங்கு மக்களுக்கு கொடுமைகளும் அநீதிகளும் இழைக்கப்படுகின்றன என்று மொத்த கேரளாவும் கொதித்து போய் இருக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி திரை பிரபலங்கள், மக்கள் பலர் லட்சத்தீவை காக்க வேண்டும் என்று இரண்டு நாட்களாக குரல் கொடுத்து வருகிறார்கள்.. லட்சத்தீவில் அப்படி என்னதான் நடக்கிறது?

Recommended Video

    புதிதாக வந்த BJP நிர்வாகி.. Lakshadweep-ல் மாறும் சட்டங்கள்.. கொந்தளிக்கும் Kerala

    லட்சத்தீவு வரலாற்று ரீதியாக கேரளாவுடன் அதிகம் நெருக்கம் கொண்டது. அங்கு பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி மலையாளம். கலாச்சார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஒரே மாதிரி குணம் கொண்டவர்கள். ஏன் லட்சத்தீவு மக்களே தங்களை மலையாளிகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வது வழக்கம்.

    கண்ணூர் அரக்கல் அரசு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால் இரண்டு பகுதிகளும் இப்போதும் நெருக்கமாக உள்ளன. இந்த நிலையில்தான் கேரளாவையும், லட்சத்தீவையும் துண்டிக்கும் பணிகளை மத்திய அரசு மறைமுகமாக செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

    என்ன நடக்கிறது

    என்ன நடக்கிறது

    லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கு தலைமை வகிக்க கூடிய நிர்வாகியாக பிரபுல் கே பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த இவர் பாஜகவை சேர்ந்தவர். குஜராத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். லட்சத்தீவு சட்டதிட்டங்களை வகுக்க கூடிய அதன் நிர்வாகியாக பிரபுல் பட்டேல் கடந்த டிசம்பரில் நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்தில் இருந்தே அமைதியாக இருந்த லட்சத்தீவு தற்போது கொதித்துக்கொண்டு இருக்கிறது.

     இஸ்லாமியர்கள்

    இஸ்லாமியர்கள்

    இவர் அங்கு நிர்வாக பொறுப்பை எடுத்ததில் இருந்தே மலையாளிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார் என்று புகார் வைக்கப்பட்டுள்ளது. முதலாவதாக லட்சத்தீவு கப்பல்கள், போட்கள் எதுவும் கேரளாவின் பேய்ப்பூர் துறைமுகத்திற்கு செல்ல கூடாது, மாறாக கர்நாடகாவில் உள்ள மங்களூர் துறைமுகம்தான் செல்ல வேண்டும் என்று பிரபுல் பட்டேல் உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரவு

    உத்தரவு

    அதாவது கேரளாவுடன் படகு போக்குவரத்து, வணிக போக்குவரத்தை துண்டிக்கும் விதமாக இப்படி உத்தரவிட்டுள்ளார். கேரள மக்கள் லட்சத்தீவில் அதிகமாக இருந்தும் கூட இப்படி ஒரு விதியை வேண்டுமென்றே அவர் திணித்துள்ளார். அதேபோல் லட்சத்தீவில் குண்டர் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளார். இந்தியாவிலேயே குற்றம் நடக்காத ஒரே பகுதி லட்சத்தீவுதான்.

    சிறைகள்

    சிறைகள்

    அங்கு இருக்கும் முக்கிய சிறைகள் கூட காலியாக இருக்கின்றன. இப்படிப்பட்ட நிலையில் அங்கு தேவையின்றி குண்டர் சட்டத்தை கொண்டு வந்து, மக்களை சிறைக்கும் அனுப்பும் திட்டத்தில் பிரபுல் பட்டேல் உள்ளார். லட்சத்தீவில் உள்ள இஸ்லாமியர்களை குறி வைத்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பதாக கேரளாவின் முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் புகார் வைத்துள்ளார்.

    சசி தரூர்

    சசி தரூர்

    கேரளா காங்கிரஸ் எம்பி சசி தரூரும், பிரபுல் பட்டேலின் நடவடிக்கைகள் லட்சத்தீவில் அமைதியை குலைக்கும் ஒன்று என்று கூறி உள்ளார். கேரள மக்கள் மாட்டுக்கறி சாப்பிடுவார்கள் என்று தெரிந்தும் கூட, அங்கு மாட்டுக்கறி விற்பனை மற்றும் ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு பள்ளிகள் அசைவ உணவிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா

    கொரோனா

    கடந்த 2020ல் லட்சத்தீவில் கொரோனா கேஸ்கள் இல்லாத நிலையில் பிரபுல் பட்டேல் வந்த பின் 6000 கேஸ்கள் வரை லட்சத்தீவில் பதிவாகி உள்ளது. இவரின் மோசமான நிர்வாகம், பிடிவாதம், அறிவியலை நம்பாத குணம் காரணமாக மக்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்புகள் ஏற்படுவதாக கேரள அரசியல் தலைவர்கள் புகார் அளித்துள்ளனர்.

    லட்சத்தீவு

    லட்சத்தீவு

    லட்சத்தீவை குட்டி குஜராத் போலவும், உத்தர பிரதேசம் போலவும் மாற்ற பிரபுல் பட்டேல் களமிறக்கப்பட்டு இருப்பதாக கேரள அரசியல் தலைவர்களும், நடிகர்களும் புகார் வைத்துள்ளனர். அதேபோல் லட்சத்தீவில் இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்ற விசித்திரமான சட்டங்களையும் பிரபுல் பட்டேல் மொழிந்துள்ளார்.

    கொதிப்பு

    கொதிப்பு

    இவரை உடனே திரும்ப பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பினராய் விஜயன் கடிதம் எழுதி உள்ளார். எங்கள் லட்சத்தீவை காப்பாற்றுங்கள் என்றது நடிகர்கள் பிரித்வி ராஜ், கீதா மோகன்தான், சலீம் குமார் போன்ற பலர் மலையாள திரையுலகில் கொதிக்க தொடங்கி உள்ளனர். அழகான லட்சத்தீவு தற்போது பாஜகவின் பிரபுல் பட்டேல் வருகையால் கொதிக்க தொடங்கி உள்ளனர்.

    English summary
    Save Lakshadweep: Malayalis joins together to save the UT from BJP's new administrator Prabul Patel.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X