கோணல் மாணலான பற்கள்.. உனக்கெல்லாம் வேலை கிடையாது.. மறுத்த வனத்துறை! கொதித்தெழுந்த எஸ்சி/எஸ்டி ஆணையம்
திருவனந்தபுரம்: 'பீட்' அதிகாரி பணியிடத்திற்கு விண்ணப்பித்திருந்த இளைஞரை, அவரது பற்களை காரணம் காட்டி பணியில் சேர அனுமதிக்க முடியாது என கேரள வனத்துறை கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பாலக்காடு அட்டப்பாடி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு மலை கிராமத்தில் வசித்து வருபவர்தான் 21 வயதான முத்து எனும் இளைஞர். இவர் குறுபர் எனப்படும் பழங்குடி சமூகத்தை சேர்ந்தவராவார். சிறுவயதிலிருந்து காடுகளிலேயே வளர்ந்த காரணத்தினால் காடுகளின் ஒவ்வொரு இடமும் இவருக்கு பரிட்சியமாகியுள்ளன. காட்டில் இருக்கும் விலங்குகள், மழையில் எங்கு வெள்ளம் வரும், எந்த பயிர்கள் அதிகமாக வளரும் என எல்லாம் இவருக்கு அத்துப்படி.
இந்நிலையில் கல்லூரி படிப்பை முடித்த இவர் வேறு வேலைக்கு செல்வதை காட்டிலும் வனத்துறையில் சேர்ந்துவிடலாம் என்று யோசித்திருக்கிறார். அதற்கேற்றார் போல கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்த 'பீட்' அதிகாரி பணியிடத்திற்கான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் இவருக்கு போஸ்டிங் கிடைக்கவில்லை. இவருக்கு பின்னதாக தேர்வெழுதியவர்களுக்கு இடம் கிடைத்த நிலையில், இவருக்கு எந்த அழைப்பும் வரவில்லை.

தோல்வி
இவ்வாறு இருக்கையில் இன்று இவருக்கு கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அக்கடிதத்தில் இவர் உடல் தகுதி தேர்வில் தோல்வியடைந்து இருப்பதாகவும் எனவே இந்த பணிக்கு தகுதியற்றவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இதற்கான காரணம் இவரது பற்கள் முறையற்று ஒழுங்கான வரிசையில் இல்லாததும், நீண்டு துருத்திக்கொண்டு இருந்ததும்தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை கண்டு அதிர்ந்து போன இளைஞர் முத்து இது குறித்து சமூக வலைத்தளத்தில் கேள்வியெழுப்பியுள்ளார். பொதுவாக இம்மாதிரியான பாதுகாப்பு துறை சார்ந்த பணிகளுக்கு உடல் தகுதி மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால் பற்கள் துருத்திக்கொண்டிருந்த காரணத்தால் இளைஞருக்கு பணி வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

வறுமை
முத்து சிறு வயதில் கீழே விழுந்ததில் அவரது பற்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய ரூ.18,000 செலவாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இவரது குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் என்பதால் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து இவரால் இதனை சரி செய்யமுடியவில்லை. இவரது பெற்றோரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய வேலை எதுவும் செய்யவில்லை. தந்தை அருகில் இருக்கும் நகரத்தில் கூலி வேலை செய்து வருகிறார். தாய் அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்நிலையில், முத்து எப்படியாவது இந்த பீட் அதிகாரி பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்று கடும் முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறார்.

வழக்குப்பதிவு
இப்படி இருந்த நிலையில்தான் இவரை வனத்துறை நிராகரித்துள்ளது. இந்த சம்பவம் ஊடகங்கள் வழியாக வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இது குறித்து மாநில எஸ்சி மற்றும் எஸ்டி ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் வனத்துறை முதன்மை செயலாளர் மற்றும் கேரள பப்ளிக் சர்வீஸ் கமிஷனிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. தற்போது இந்த சம்பவம் கேரளாவில் பெரும் விவாதங்களை கிளப்பி இருக்கிறது. வனத்துறையை பொறுத்த அளவில் 10-15 கி.மீ பரப்பளவை கொண்ட இடம் ஒரு பீட் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதியில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் பீட் அதிகாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

பீட் அதிகாரி
ஒவ்வொரு 3-5 பீட் அதிகாரிகளுக்கும் வட்ட வன அலுவலர்தான் உயர் அதிகாரியாவார். தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பீட்டில் சட்டவிரோதமாக மரம் வெட்டி கடத்துதல், காட்டிலிருந்து இதர வளங்களை கொள்ளையடித்தல் ஆகியவற்றை தடுக்க வேண்டிய பொறுப்பு இவர்களுடையதுதான். மேலும், காடு தீப்பற்றி எரியாமல் பாதுகாத்தல், காட்டில் உள்ள சாலைகளை பராமரித்தல், காட்டில் உள்ள கட்டிடங்களை கண்காணித்தல் போன்ற வேலைகளை இவர்கள் செய்வார்கள். பொதுவாக இவர்கள் அருகில் உள்ள கிராமத்து மக்களிடத்தில் மிகவும் அன்பாக பழக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications