திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இடதுசாரிகள், பாஜக, காங் கட்சிகளை ஓரங்கட்டி விஸ்வரூபம் எடுத்த டிவென்டி 20 அமைப்பு.. எப்படி சாத்தியம்?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் முக்கிய அரசியல் கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு 2015 உள்ளாட்சி தேர்தலில் சாதித்தது போல் இந்த 2020 தேர்தலிலும் டிவென்டி டிவென்டி அமைப்பு வரலாற்று சாதனை புரிந்தது. யார் இந்த டிவென்டி டிவென்டி அமைப்பு?

கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. பொதுவாக மாநில சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் பிரதான கட்சிகளே முதல் இரு இடங்களை பிடிக்கும்.

ஆனால் இந்த முறை டிவென்டி டிவென்டி என்ற அமைப்பானது ஏக்ராநாடு கிராம பஞ்சாயத்தில் முதல் முறையாக இந்த அமைப்பு தற்போது போட்டியிட்டது. இதில் மொத்தம் உள்ள 14 வார்டுகளிலும் அந்த அமைப்பினரே வெற்றியை பெற்றனர்.

எதிர்க்கட்சியே இல்லாத ஐக்கரநாடு பஞ்சாயத்து.. 14 இடங்களையும் தட்டித் தூக்கிய அரசியல் சாரா அமைப்பு எதிர்க்கட்சியே இல்லாத ஐக்கரநாடு பஞ்சாயத்து.. 14 இடங்களையும் தட்டித் தூக்கிய அரசியல் சாரா அமைப்பு

கிழக்கம்பலம்

கிழக்கம்பலம்

அது போல் மொத்தம் 19 வார்டுகளை கொண்ட கிழக்கம்பலம் வார்டில் அந்த அமைப்பு ஏற்கெனவே 5 வார்டுகளில் வென்றுள்ளது. மற்ற வார்டுகளிலும் அந்த அமைப்பை முன்னிலை வகித்து வருகிறது. ஏக்ராநாடை தவிர முழவன்னூர் பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 8 வார்டுகளில் 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

அமைப்பு

அமைப்பு

இந்த பஞ்சாயத்தில் மொத்தம் உள்ள 19 வார்டுகளிலும் டிவென்டி டிவென்டி அமைப்பு முதல் முறையாக போட்டியிட்டது. அது போல் குன்னத்துநாடு பஞ்சாயத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. இங்கு 6 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஒரே ஒரு பஞ்சாயத்தான கிழக்கம்பலத்தில் மட்டுமே இந்த அமைப்பு போட்டியிட்டு வெற்றி வாகை சூடியது.

ஊராட்சிகளிலும் போட்டி

ஊராட்சிகளிலும் போட்டி

ஆனால் தற்போது 4 பஞ்சாயத்துகளில் முதல்முறையாக போட்டியிட்டுள்ளது. கிழக்கம்பலம், முழவன்னூர், ஏக்ராநாடு, குன்னத்துநாடு ஆகியவை ஆகும். சில ஊராட்சிகளிலும் இந்த அமைப்பு போட்டியிட்டது. இந்த தேர்தலில் போட்டியிடும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி, பாஜக கூட்டணி, காங்கிரஸ் ஆகிய மூன்று முக்கிய கட்சிகளும் டிவென்டி டிவென்டியை ஓரங்கட்ட போராடியும் அந்த அமைப்பு பரந்து விரிந்து விசாலமாகியுள்ளது.

முன்கூட்டியே வேட்பாளர்கள்

முன்கூட்டியே வேட்பாளர்கள்

முக்கிய கட்சிகளை எல்லாம் தோற்கடித்துவிட்டு அனைவரும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு வெற்றியை இந்த அமைப்பு பெற என்ன காரணமாக இருக்கும். இந்த முறை அதிக பஞ்சாயத்துகளில் போட்டியிட வேண்டும் அதிக இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு அந்த அமைப்பானது முன்கூட்டியே வேட்பாளர்களை நியமித்து தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது.

கூடுதல் ஊதியம்

கூடுதல் ஊதியம்

கிட்டெக்ஸ் குரூப் என்ற கார்ப்பரேட் நிறுவனத்தின் துணையுடன் களமிறங்கியது டிவென்டி டிவென்டி அமைப்பு. இது ஒரு அரசியல் அமைப்பு அல்ல. கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் நல்ல வளர்ச்சி திட்டங்களை அந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. வார்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு ரூ 15 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஆனால் இந்த அமைப்பு அந்த சம்பளம் இல்லாமல் கூடுதலாக ரூ 20 ஆயிரத்தையும் வழங்கியது.

சூப்பர் மார்க்கெட்

சூப்பர் மார்க்கெட்

நியாயமான விலையில் அத்தியாவசிய பொருட்களை கிடைக்கும் வகையில் சூப்பர் மார்க்கெட்டுகளை தொடங்கியது. என்னதான் கார்ப்பரேட் நிறுவனத்தின் துணையுடன் களமிறங்கினாலும் மக்களுக்கு ஆதரவான பல்வேறு நடவடிக்கைகளில் இந்த அமைப்பு இறங்கியதே இதன் வெற்றிக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

English summary
Twenty 20 Outfit plays a vital role in sweeping all the major parties in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X