திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாக்குவங்கி முக்கியமில்லை.. சபரிமலையில் ஒரே நிலைப்பாடுதான்... பினராயி திட்டவட்டம்!

சபரிமலை கோவில் பிரச்சனையில் நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சபரிமலையில் ஒரே நிலைப்பாடுதான்... பினராயி திட்டவட்டம்!- வீடியோ

    திருவனந்தபுரம்: சபரிமலை கோவில் பிரச்சனையில் நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து இரண்டு முறை சபரிமலை கோவிலில் நடை திறக்கப்பட்டது.

    ஆனால் கோவிலுக்குள் பெண்கள் நுழைய கடும் எதிர்ப்பு நிலவியது. இந்துத்துவா அமைப்பினர், பாஜகவினர் பெண்கள் நுழைவிற்கு எதிராக தீவிரமாக போராடினார்கள்.

    நள்ளிரவில் வந்து போலீஸ் வீட்டுக் கதவை தட்டியது.. ஏ.ஆர்.முருகதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டுநள்ளிரவில் வந்து போலீஸ் வீட்டுக் கதவை தட்டியது.. ஏ.ஆர்.முருகதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

    யாரும் நுழையவில்லை

    யாரும் நுழையவில்லை

    இதனால் இதுவரை ஒரு பெண் கூட சபரிமலை கோவிலுக்குள் செல்லவில்லை. இது அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கொஞ்சம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த போராட்டத்தை அம்மாநில முதல்வர் சரியாக கையாளவில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

    பிடிக்க பார்க்கிறார்கள்

    பிடிக்க பார்க்கிறார்கள்

    இந்த நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் இதுகுறித்து அளித்த பேட்டியில், கேரளாவில் சபரிமலையை வைத்து சிலர் அரசியல் செய்ய பார்க்கிறார்கள். அவர்களுக்கு கேரளாவில் இதுவரை இடமில்லை. அதனால் இப்போது சபரிமலையை வைத்து இடத்தை பிடிக்க பார்க்கிறார்கள். மக்களை பிளவுபடுத்த பார்க்கிறார்கள்.

    அனுமதிக்க மாட்டோம்

    அனுமதிக்க மாட்டோம்

    கேரளாவில் மக்களை மதத்தை வைத்து பிளக்க முடியாது. யார் என்ன செய்தாலும் கேரளா மக்கள் ஒன்றாகத்தான் இருப்பார்கள். கேரளா ஒருவேளை மதத்தால் பிளவுபட்டு இருந்தால் பல காலத்திற்கு முன்பே இந்த மாநிலமே இல்லாமல் போய் இருக்கும். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

    வாக்கு தேவையில்லை

    வாக்கு தேவையில்லை

    எங்களுக்கு வாக்கு வங்கி அரசியல் தேவையில்லை. சில இடங்களில் சபரிமலை பிரச்சனை காரணமாக நாங்கள் தோல்வி அடைந்தால் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நாங்கள் வாக்கு வங்கிக்காக கட்சி நடத்தவில்லை. கேரளாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதே முக்கியம். தேர்தலில் தோற்றாலும் கூட, சபரிமலையில் எங்கள் நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம்.

    English summary
    Votes don't matter, leading Kerala on the progressive path is everything says Pinarayi Vijayan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X