அந்த "வீடியோ".. ஷாரோன் போனில் இருந்தது என்ன? பாய்சன் காதலி கிரீஷ்மா ஷாக் வாக்குமூலம்.. மிரண்ட போலீஸ்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஷாரோன் என்ற இளைஞரை கிரீஷ்மா என்ற பெண் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவத்தில் அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம் ஒன்று வெளியாகி உள்ளது.
கேரளா எல்லையில் களியக்காவிளை தாண்டி பாறசாலை பகுதியில் வசித்து வந்தார் ஷாரோன் ராஜ். இவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட கிரீஷ்மா அவருக்கு கஷாயத்தில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார்.
ஷாரோனை சமீபத்தில் கிரீஷ்மா விஷம் கொடுத்து கொலை செய்தார். மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வந்த ஷாரோன் கடந்த மாதம் 25ம் தேதி சிகிச்சை பலனின்றி பலியானார்.
பாத்ரூமில் பாய்பிரண்ட்.. ஐயோ ஷாரோன்.. அம்பலமான

ஷாரோன்
இந்த நிலையில் கிரீஷ்மா தற்போது அதிர்ச்சி வரும் வாக்குமூலம் ஒன்றை வழங்கி உள்ளார். போலீசார் அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று வாக்குமூலம் வாங்கி வருகிறார்கள். ஷாரோன் கிரீஷ்மா ஒன்றாக சுற்றிய இடங்கள், அவர்கள் ஒன்றாக சென்ற சுற்றுலா தளங்கள் ஆகிய பகுதிகளில் எல்லாம் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை டைம்லைன் உருவாக்க கூடிய ஸ்பாட் விசாரணை என்பார்கள். அதாவது இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த நேரத்தில் என்ன நடந்தது? எப்படி கொலையை நோக்கி விவகாரங்கள் சென்றது?

கடைசி நாட்கள்
கடைசி நாட்களில் என்ன நடந்தது? என்பது பற்றிய டைம் லைனை உருவாக்குவதற்காக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படிதான் சமீபத்தில் நடந்த விசாரணையில் கிரீஷ்மா கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஷாரோனிடம் இருந்த போன் பற்றி பேசி இருக்கிறார் கிரீஷ்மா. ஷாரோன் போனில் நாங்கள் ஒன்றாக எடுத்த போட்டோக்கள், வீடியோக்கள் இருந்தன. நாங்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்கள் இருந்தன.

என்ன நடந்தது?
அவனிடம் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன். அதனால் அதை டெலிட் செய் என்றேன். ஆனால் அவன் என்னிடம் அதை டெலிட் செய்ய முடியாது என்று கூறிவிட்டான். அதோடு மறுநாளே என்னை சர்ச்சுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டான். ஆனால் போனில் இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் எதையும் அவன் டெலிட் செய்யவில்லை. எங்கே நான் வேறு இளைஞரை திருமணம் செய்தால், என்னை கொன்றுவிடுவானோ என்று அச்சத்தில் கொலை செய்ததாக கிரீஷ்மா கூறி உள்ளார்.

ஷாரோன் கொலை
அதோடு ஷாரோன் கொலைக்கு முன்பாக அம்மாவிடம் இதை பற்றி தெரிவித்தது எப்படி என்றும் கூறியுள்ளார். என் அம்மாவிடம் இதை பற்றி அடிக்கடி சொன்னேன். முதலில் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்ய பார்த்தேன். அதற்காக ஒன்றாக திட்டமிட்டோம். ஆனால் அவன் சாகவில்லை. இதையடுத்தே நிலைமை கைமீறி போனதால் அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன்.

விஷம்
அதன்பின்பே விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தோம். நான் விஷம் உள்ள கஷாயத்தை கொடுத்த போது வீட்டில் யாரும் இல்லை. ஆனால் விஷத்தை அம்மாவும், மாமாவும்தான் கலந்து வைத்துவிட்டு, வெளியே சென்றனர். அதை திட்டமிட்டபடி நான் ஷாரோனுக்கு கொடுத்தேன் என்று கிரீஷ்மா வாக்குமூலம் கொடுத்துள்ளார். தனக்கு காய்ச்சல், முதுகுவலி இருக்கிறது.

வாக்குமூலம்
அதனால் நான் கஷாயம் குடிப்பது போல நடித்தேன். அதை பார்த்து ஷாரோன் கஷ்டமாக இருக்கிறதா என்று கேட்டான். ஆமாம் கஷ்டமாக இருக்கிறது. முடிந்தால் நீ இதை குடித்து பாரேன் என்று கூறி அவனுக்கு கஷாயத்தை கொடுத்தேன் என்று கிரீஷ்மா வாக்குமூலத்தில் கூறியுள்ளார். கிரீஷ்மா கொடுத்த இந்த வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த கொலை தொடர்பாக இன்னும் சில நாட்களுக்கு போலீசார் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.