ரவுடி மனைவியுடன் எஸ்கேப்பான சின்ராசு! சமயபுரம் கோவிலில் மிரண்ட ஒத்தரோசா! யார் இந்த புல்லட் ராஜா?
திருச்சி : திருச்சி அருகே ஆட்டோ ஓட்டுனர் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த புல்லட் ராஜா என்பவரை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.. உலகப் புகழ்பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடந்த கொலை சம்பவம் குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காமராஜர் காலனியைச் சேர்ந்த ராமசாமி மகன் சின்ராசு. 41 வயதான இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இந்நிலையில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே மேல சீதேவிமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜா என்கின்ற புல்லட் ராஜா எனபவருடைய மனைவி கிருஷ்ணவேணிக்கும் சின்ராசுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

முறையற்ற உறவு
சிறிது நாட்களில் புல்லட் ராஜாவின் மனைவியை சின்ராசு தனது வீட்டிலேயே தங்க வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதற்காக புல்லட் ராஜா சின்னராசு மேல் கடும் கோபத்துடன் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புல்லட் ராஜா கிருஷ்ணவேணியுடன் தனது அக்கா மற்றும் அக்கா கணவருடன் சாமி தரிசனம் செய்ய சின்ராசு ஆட்டோவில் சென்றார்.

கோவிலில் கொலை
இதை அறிந்த புல்லட் ராஜா பின் தொடர்ந்து சென்று சமயபுரம் கோயில் முடிகாணிக்கை மண்டப வளாகத்தில் சின்ராசுவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தகராறு முற்றியது அப்போது புல்லட் ராஜா தன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சின்ராசுவின் கழுத்தில் குத்தியதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சின்ராசு பரிதாபமாக பலியானார்.

மனைவியுடன் மாயம்
உடனே புல்லட் ராஜா அங்கிருந்து மனைவி கிருஷ்ணவேணியை இழுத்துக்கொண்டு தலைமறைவானார். இது குறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு தடவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டது.

அதிரடி கைது
மோப்பநாய் லீலி கோயில் மண்ட வளாகத்தில் சிறிது தூரம் சுற்றி வந்து நின்றுவிட்டது. தொடர்ந்து கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ராஜாவை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில், சின்ராசுவின் அண்ணன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தலை மறைவாக இருந்த புல்லட் ராஜாவை சமயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கருணாகரன் மற்றும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட சின்ராசு கடந்த வருடம் மண்ணச்சநல்லூர் அருகே ஈச்சம்பட்டி ஏரியில் லாரி டிரைவர் கொலை வழக்கில் ராஜா என்கின்ற புல்லட் ராஜா கைதாகி சிறை செனறு தற்போது ஜாமீனில் வெளியே இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக










Click it and Unblock the Notifications