Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | அவர்வயின் விதும்பல் | வருகமன் கொண்கண் ஒருநாட் திருக்குறள்

வருகமன் கொண்கண் ஒருநாட் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
1266 வருகமன் கொண்கண் ஒருநாட் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
— மு. வரதராசன்

என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்
— கலைஞர்

என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன்.
— சாலமன் பாப்பையா

என் காதலன் ஒரு நாள் மட்டும் என்னிடம் வருவானாக; வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக, அவனோடு, இன்பத்தை நானும் பருகுவேன்
— புலியூர்க் கேசிகன்

அவசியம் வருவார் அவதியுறச் செய்தவர் ஒருநாள். அன்று பருகுவேன் பிரிதலால் உண்டான நோய் எல்லாம் கெட.
— சிவயோகி சிவகுமார்

கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன். இது வரவு வேட்கையாற் கூறியது.
— மணக்குடவர்

(இதுவும் அது.) கொண்கன் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன். ('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.).
— பரிமேலழகர்

English Couplet:

O let my spouse but come again to me one day!
I'll drink that nectar: wasting grief shall flee away.

Couplet Explanation:

May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.

Transliteration (Tamil to English):

varukaman kon-kan oru-naal parukuvan
paidhalnhoi ellaam keda

மொத்தம் 133 அதிகாரங்கள்
1266 of 1330

மேலும் அவர்வயின் விதும்பல் குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+