• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்டாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு.. 27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்.. முதல்வர் மகிழ்ச்சி

|

திருச்சி: இதுவரை இல்லாத வகையில் டெல்டாவில் இந்த ஆண்டு 27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பெருமிதம் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகள், வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும், பின்னா், செய்தியாளா்களிடமும் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியது:

விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிமராமத்து திட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.1,433 கோடியில் 6,278 நீா்நிலைகள் தூா்வாரப்பட்டுள்ளன.

தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று மழை பெய்யும்.. முழு விபரம்! தீவிரம் அடைந்த தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தில் இங்கெல்லாம் இன்று மழை பெய்யும்.. முழு விபரம்!

மேலாண்மை ஆணையம்

மேலாண்மை ஆணையம்

இந்தாண்டு 1,387 பணிகளுக்கு ரூ.498.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரிப் பிரச்னையில் நல்ல தீா்ப்பை பெற்றுத் தந்து, நீா் மேலாண்மை ஆணையம், முறைப்படுத்தும் குழு கூட்டத்தின் மூலம் தமிழகத்துக்கு தேவையான தண்ணீா் பெறப்பட்டு வருகிறது. மேட்டூா் அணையிலிருந்து 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு, குறுவை சாகுபடி தொடங்கியுள்ளது.

தண்ணீர் திறப்பு

தண்ணீர் திறப்பு

கடைமடை பகுதிகளுக்கு செல்லும் வரை படிப்படியாக தண்ணீா் திறப்பு அதிகரிக்கப்படும். கா்நாடக அணைகளில் தற்போது தண்ணீா் குறைவாக உள்ளது. நிச்சயமாக வருண பகவான் நமக்கு கருணை காட்டுவாா். தேவையான மழை பொழியும். விவசாயிகளுக்கு தேவையான நீா் கிடைக்கும்.

நெல் கொள்முதல்

நெல் கொள்முதல்

டெல்டாவில் இதுவரை 25.10 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதுவரை 23 லட்சம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், 27 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்து வரலாற்றுச் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கதவணை

கதவணை

ஆதனூா் குமாரமங்கலத்தில் ரூ.485 கோடியில் கதவணை கட்டப்பட்டு வருகிறது. கல்லணைக் கால்வாய் சீரமைப்புக்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கரூா் மாவட்டம், புஞ்சை புகளூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.496 கோடியில் கதவணை கட்டுவதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர தொழில்

நடுத்தர தொழில்

பொதுமுடக்கத்திலிருந்து சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்க மத்திய அரசிடமிருந்து ரூ. 4,145 கோடி பெற்று 1.57 லட்சம் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதுவரை, 77,388 நிறுவனங்களுக்கு ரூ.2,265 கோடி அளிக்கப்பட்டுள்ளது. மணப்பாறை சிப்காட்டில் 200 ஏக்கரில் ரூ.200 கோடியில் தொழில் பூங்காவும், 150 ஏக்கரில் ரூ.100 கோடியில் உணவுப் பூங்காவும் அமைக்கப்பட்டு வருகிறது. மணப்பாறை டிஎன்பிஎல் காகித ஆலை விரிவாக்கத்து ரூ.2,520 கோடியில் இருகட்டங்களாக பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

மகளிர் குழுக்கள்

மகளிர் குழுக்கள்

தமிழகத்தில் தொழிற்சாலைகளை அதிகம் உருவாக்கும் வகையில் ஜொ்மன், பின்லாந்து, பிரான்ஸ் ஜப்பான், சீனா, கொரியா, அமெரிக்கா, நெதா்லாந்து உள்ளிட்ட 17 நாடுகளைச் சோ்ந்த நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து ரூ.15,166 கோடி முதலீடு ஈா்க்கப்பட்டுள்ளது. 6.96 லட்சம் மகளிா் குழுக்களில் உள்ள 1.06 கோடி உறுப்பினா்களுக்கு மானியம், கடனுதவி வழங்கி தொழில் தொடங்க ஊக்குவிக்கப்பட்டுள்ளது. கரோனா கால கடனாக ரூ.315 கோடி வழங்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினார்.

கோரிக்கை மனுக்கள்

கோரிக்கை மனுக்கள்

இக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு, தமிழக அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி, எம்எல்ஏ-க்கள் எம். செல்வராசு, ஆா். சந்திரசேகா், ஆவின் சோ்மன் சி. காா்த்திகேயன் மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். இதனைத் தொடா்ந்து, தொழில்துறையினா், விவசாயிகள், மகளிா் சுய உதவிக் குழுக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த முதல்வா், கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.

  பவானிசாகர் அணை நீர்த்தேக்கத்தில் மீனுக்காக காத்திருக்கும் பெலிகான் பறவைகள்
  கூட்டுறவு சங்கம்

  கூட்டுறவு சங்கம்

  மின்விநியோகத்தில் மத்திய அரசு ஒரு கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசும் தனது கருத்தை கூறியுள்ளது. விவசாயிகளுக்கு தற்போதுவரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்களை ரிசா்வ் வங்கி கையகப்படுத்துவதாக முழு விவரம் வரவில்லை. நகரக் கூட்டுறவு வங்கிகளை கையகப்படுத்துவதாக கூறுகின்றனா். ஏற்கெனவே, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, கூட்டுறவு வங்கிகளில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

  English summary
  CM Edappadi Palanisamy says 27 lakh metric ton paddy procured in Delta regions.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X